Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

எட்டே நாட்களில் எடுக்கப்பட்டுள்ள க்ரைம் திரில்லர் படம் ‘கிரிங் கிரிங்’.

Kiring Kiring Movie Stills (3)செய்யாத கொலைக் குற்றத்தில் சிக்கிக் கொள்கிற நாயகன் அதிலிருந்து மீளப்போராடுகிறான்.அதிலிருந்து வெளியே வர அவன் தவிக்கிற தவிப்பும் பதைபதைக்கிற பதற்றமும் . போராட்டமும்தான் கதை. இது ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர். இது ஒரே இரவில் நடக்கும் கதை. நாயகனாக ரோஹன் நடித்திருக்கிறார் இவர் ஏற்கெனவே சிலபடங்களில் தோன்றியவர். நாயகியாக காவ்யா நடித்துள்ளார். படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் ராகுல். இவர் வின்சென்ட் செல்வாவின் மாணவர். படத்தில் நடித்துள்ள நாயகன் ரோஹன் உள்பட பெரும்பாலான நடிகர்கள் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். படத்தின் பரபரப்புக்கு வேகத்தடையாக இருக்குமென்று பாடல்கள் படத்தில் இடம் பெறவில்லை. சென்னை, தூத்துக்குடி போன்ற இடங்களில் எண்ணி எட்டே நாட்களில் படப்பிடிப்பை முடித்து வந்திருக்கிறார் இயக்குநர் ராகுல். படத்துக்கு ஒளிப்பதிவு துவாரகேஷ், இசை ஜூடு, படத்தொகுப்பு சிவதர்மா. நிறைய குற்றங்களில் துப்பு துலங்கி குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க உதவியாக இருப்பது மொபைல் போன்தான். படத்தில் மொபைல் போனின் ‘கிரிங் கிரிங்’ ஒலி பெரிய திருப்பங்களுக்கு வழிவகுப்பதால் படத்துக்கு இப்பெயர் வைக்கப் பட்டுள்ளது.

Kiring Kiring Movie Stills (2)எட்டே நாளில் ஒரு படமா? அவசரக் கோலமாக இருந்து விடாதா என்று இயக்குநர் ராகுலிடம் கேட்டபோது ” நன்றாகத் திட்டமிட்டால் எதையும் செய்ய முடியும். இது ஒரே இரவில் நடக்கும் கதை. அதனால் எட்டே நாட்களில் எடுத்து முடித்தோம். இதன் பின்னால் சரியான திட்ட மிடலும் பலரது உழைப்பும் இருந்தது. இது அவசரமாக எடுக்கப்பட்ட படமல்ல. விறுவிறுப்பான திரைக்கதை. இருக்கும்.எனவே பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.

இன்று 2 கோடி 10 கோடி பணம் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்று பேசுகிறார்கள்.. ஆனால் படத்தின் தயாரிப்பு ச் செலவைக் காட்டி வியாபாரம் செய்ய முடியாது. படத்தில் புதுமை, இருக்க வேண்டும். கதை சொல்லும் விதத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும். அப்படி எடுக்கப் படுகிற படத்துக்கு வியாபாரிகள் வருவார்கள். வியாபாரம் நடக்கும்.” என்கிற இயக்குநர் ,தனக்கு இயக்கத்துடன் தயாரிப்புத் திறமையும் இருப்பதால் ‘ஆர்பி எம் சினிமாஸ் ‘சார்பில் படத்தைத் துணிந்து தயாரித்ததாகக் கூறுகிறார். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Back To Top
CLOSE
CLOSE