Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் புதுடெல்லி!

IndiaTv94f011_vairamuthuபுதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் வியாழன் காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, ஸ்மிருதி இரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசுபெற்ற 133 மாணவ மாணவிகள் அதில் கலந்துகொண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதுகிறார்கள்.

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மற்றும் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, பொன்னம்பல அடிகளார், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் ஆகியோருக்கு திருவள்ளுவர் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

திருக்குறள் ஒப்புவிக்கும் குழந்தைகள் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியோடு சிறப்புப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

திருவள்ளுவரை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் முயற்சி இது என்று விழாவை ஏற்பாடு செய்து வரும் தருண் விஜய் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 16ஆம் தேதி பிற்பகல் விமானத்தில் கவிஞர் வைரமுத்து புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

Back To Top
CLOSE
CLOSE