Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நடிப்பை வெளிபடுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க தயார் – நடிகர் செல்வா.

FullSizeRenderபல படங்களில் கதாநாயகனாக நடித்த செல்வா, சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற ‘ஈட்டி’ படத்தில் ஒரு காவல் அதிகாரியாக நடித்து இருந்தார். அவரது வேடம் ரசிகர்கள் மத்தியிலும் , ஊடகங்கள் இடையேயும்,பெரும் வரவேற்ப்பை பெற்று உள்ளது.போலீஸ் வேடத்தில் இவர் கச்சிதமாக பொருந்தி உள்ளத்தில் ஆச்சிரியம் இல்லை. காரணம் இவரது தந்தை ஒரு ஓய்வுப் பெற்ற உயர் காவல் அதிகாரி. அதைத் தவிர இவரது அண்ணன் தான் ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தில் மூலம் காவல் துறைக்கு பெரும் கெளரவம் ஈட்டித் தந்த டாக்டர் ராஜசேகர்.

Selvah (7)தொழில் அதிபராகவும், கல்வி நிறுவனங்களின் நிறுவனராகவும் உள்ள செல்வா இதைப் பற்றிக் கூறும் போது ‘ இந்த வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ரவி அரசு என்னை அணுகி , கதாபாத்திரத்தை விவரித்த போதே , எனக்கு இந்தப் படம் நான் மீண்டும் தமிழ் திரை உலகில் வர சரியான படம் என்றுத் தோன்றியது. அதை தவிர ஒருக் காவல் அதிகாரியின் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் கனவு. சின்ன வயதில் இருந்தே நான் காவல் அதிகாரிகளை பார்த்து வளர்ந்ததாலே என்னுள் அந்த உணர்வு மேலோங்கியே இருக்கும்.நான் மீண்டும் நடிக்க உந்துதலாக இருந்த இயக்குனர் மிஷ்கினுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நான் தற்போது நல்ல குணசித்திர மற்றும் negative பாத்திரங்களில் கூட நடிக்கலாம் என்று இருக்கிறேன்.கனமான பாத்திரங்கள் இருந்தால் , நல்ல நடிப்பை வெளிபடுத்தும் கதாபாத்திரங்கள் அமைந்தால் நிச்சயம் நடிக்க தயார்.ஒரு நடிகனாக பிறவி எடுத்து விட்டால் சாகும் வரை நடிகன்தான் . நாயகனோ , வில்லனோ,குணசித்திர வேடமோ அதை பற்றிக் கவலை படக் கூடாது’ என்றார்.

Back To Top
CLOSE
CLOSE