Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

பாஹா கிளிக்கி – பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஒரு பாடல்

maxresdefaultபதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மிதாவின் முதல் பாடல் ‘ஹே ரப்பா’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தும், 2005ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றும் இசைத் துறையில் புதுமைகள் செய்து வருபவர் ஸ்மிதா.

தெலுகு தேசத்தில் தோன்றினாலும், ஆறு மொழிகளில் பாடல்கள் பாடி பலர் மனதை கொள்ளைகொண்ட அவருடைய ‘இஷானா’ என்ற பாடல் தொகுப்பு, உலகம் முழுதும் வாழும் இசை இரசிகர்களை மெய்மறக்கச்செய்தது.

‘பாஹா கிளிக்கி’ என்ற பாடலை வெளியிடுகிறார். இது கிளிக்கி மொழியில் உருவாகும் முதல் பாடல் ஆகும். கிளிக்கி மொழி ராஜமௌலியின் பாகுபலி படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட மொழியாகும். 750 சொற்களும் 40 இலக்கண விதிகளும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மொழியில் உருவான முதல் பாடல் ‘பாஹா கிளிக்கி’. இந்தப் பாடலுக்கு கேட்போரை ஆட்டம் போட வைக்கும் இசையை அச்சு அமைத்திருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநர் பாஸ்கோ, ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி ஆகியோருடன் இந்தப் பாடலை வடிவமைத்து இயக்கியவர் தேவகட்டா.

“பாஹா கிளிக்கி
ராஹா கிளிக்கி
பிப்பி ஃபிலிஃபி ஜிவ்லா க்ரோக்கி
ஊனோ தூவோ மூவோ ச்சாவோ
டம்பாடம்பா பூகோ கிளிக்கி”

என்று செல்லும் ஸ்மிதாவின் இந்தப் பாடல் இளைஞர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE