Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் – புதுமுகம் சட்னா…

Actress Satna Titus Stills (7)அன்றும் , இன்றும் , என்றும் தமிழ் திரை கதா நாயகிகள் கேரளாவில் இருந்துத் தான் அதிகம் வருகின்றனர். பழக்கமான முகமும்,எளிதாக புரிந்துக் கொள்ளும் தன்மையும் அவர்களை தமிழ் திரை உலகின் உச்சத்தில் உட்கார வைக்கிறது.அந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில், ‘பூ’, டிஷும்’ஆகியப் படங்களை இயக்கிய சசி இயக்கத்தில் வெளி வர இருக்கும் ‘பிச்சைகாரன்’ படத்தில் கதாநாயகியாக வரும் புதுமுகம் Satna Titus இடம் பிடிக்கிறார்.

Actress Satna Titus Stills (2)‘இதுவரை என்னை தவிர சினிமாவில் என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் நடித்ததில்லை. ஒரு சில விளம்பரங்களில் விளையாட்டாக நடித்து உள்ளேன். ஆனால் நான் சினிமாவுக்கு வரப் போகிறேன் என்றதும் என் குடும்பத்தில் பெரும் களேபரமே நடந்து விட்டது.நான் என் முடிவில் தீவிரமாக இருப்பதை பார்த்த என் பெற்றோர்கள் , போனால் போகட்டும் என்றே நடிக்க விட்டார்கள். விளம்பரங்களுக்காக கேமரா முன்பு நான் நடித்து இருந்தாலும் , சினிமா படப்பிடிப்பில் கேமரா முன் நிற்க முடியவில்லை. பயத்தில் கை கால் நடுங்க ஆரம்பித்து விட்டது.ஒரு நடிகையாக பிநாளில் வர உள்ள புகழும் , பெயரும் தான் இந்த Actress Satna Titus Stills (4)அச்சத்தை தருகிறது என்று நினைக்கிறேன்.ஆயினும் படப்பிடிப்பில் பயம் இன்றி நடிக்க எனக்கு தைரியம் கொடுத்த இயக்குனர் சசி சாருக்கும்,விஜய் ஆண்டனி சாருக்கும் நன்றி. இயக்குனர் சசி சாரின் படத்தில் நடிப்பதற்கு நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.அவரதுப் படங்களில் கதாநாயகிக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவம் அப்படி இருக்கும்.

தமிழ் திரை உலகில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க பட்ட பூ மாரி,படையப்பா நீலாம்பரி,அலை பாயுதே சக்தி, கஜினி கல்பனா , என்று நீங்கா இடம் பெரும் கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை.சசி சாரின் இயக்கத்தில் நடித்தால் அப்பேற்பட்ட பாத்திரங்கள் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

Actress Satna Titus Stills (3)விஜய் ஆண்டனி சார் வெளித் தோற்றத்தில் மிகவும் மென்மையாக இருப்பவர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவரது வேகத்தில் ஒரு அசுர பலம் தெரியும்.சினிமா , சினிமா, என்றே எந்த நேரமும் அதே கவனத்தில் இருப்பார்.தொடர்ந்து மூன்றுப் படங்கள் ஹிட் கொடுத்து இருப்பதின் சூட்சுமம் இதுதான் என்று நினைக்கிறேன்.நான் பார்த்த வரையில் பிச்சைகாரன் படமும் அவரது வெற்றி பட்டியலில் நிச்சயம் சேரும்.எனக்கு வாய்பளித்த , என் கனவை நனவாக்கிய விஜய் ஆண்டனி Corporation நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றி’ என்றார் Satna.

Back To Top
CLOSE
CLOSE