Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

முழுநீள காமெடி, ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியிருக்கும் “பட்டய கிளப்பும் பசங்க”

Pattaye Kellapum Pasanga Stills (2)பிரபல இயக்குநர் வினயன் தமிழில் இயக்கிய “காசி” “என் மன வானில்” “அற்புதத் தீவு” ஆகிய படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர் அனூப்ராஜ். இவர் இயக்கும் முதல் படம் “பட்டய கிளப்பும் பசங்க”

திறமையுள்ள இளம் இயக்குனர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை ஊக்குவித்து வரும் வித்தியாசமான தயாரிப்பாளர் ரூபேஷ் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

புதுமுகங்களாக மூன்று ஹிரோ, மூன்று ஹிரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சஜின் வர்கீஸ், ’நியூ செந்தில்’ பாஷாணம் சாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Pattaye Kellapum Pasanga Stills (10)இப்படம் குறித்து இய்க்குநர் அனூப்ராஜ் கூறுகையில், ‘சுயபுத்தி இல்லாமல் பிறர் சொல்புத்தியால் வாழ்க்கையத் தொலைத்த மூன்று இளைஞர்களைப் பற்றிய கதை இது. பணம் சம்பாதிக்கும் ஆசையில், கையில் இருக்கும் பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் பறிகொடுக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்தை ரிசார்ட் ஒன்றில் முதலீடு செய்து பண இழப்பு மட்டுமின்றி, பெரும் சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார்கள்.

அதிலிருந்து இவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள்? என்பதை நகைச்சுவையாகச் சித்தரிக்கும் படம்தான் ‘பட்டய கிளப்பும் பசங்க’ என்று அனூப்ராஜ் கூறினார். முழுநீள காமெடி, ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE