Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

சென்சாரில் பாராட்டும் ,’யு’ சான்றிதழும் பெற்றுள்ள ‘சீனி’ திரைப்படம்

Seeni Movie Stills (2)இயக்குனர் மனோஜ்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்கு னராக பணிபுரிந்து ., பின் அவரது தயாரிப்பிலேயே ராஜு சுந்தரம் – சிம்ரன் ஜோடி நடித்த ‘ஐ லவ் யூ டா ‘ படத்தை இயக்கியவர் ராஜதுரை . பிரபல இயக்குனர் சுராஜின் உதவியாளருமான ராஜதுரையின் இயக்கத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீனி.’

Seeni Movie Stills (10)வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ எனும் பேனரில் மதுரை.ஆர்.செல்வம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள ‘ சீனி’ திரைப்படத்தில் அறிமுக நாயகர்கள் சஞ்சய் , பரத்ரவி இருவருடன் முன்னணி இளம் நடிகை ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 2015ம் ஆண்டின் இறுதியில் சென்சார் ஒரு கட் கூட கொடுக்காமல் ‘யு’ சர்டிபிகேட் வழங்கியிருப்பதுடன ‘சீனி’ தரமான படம் என., அதன் தயாரிப்பாளர் மதுரை ஆர்.செல்வத்தையும் , இயக்குனர் ராஜதுரையையும் அழைத்து பாராட்டும் தெரிவித்திருப்பதில் மேற்படி படத்தயாரிப்பு மற்றும் இயக்குனர்தரப்பு சந்தோஷத்தில் இருக்கிறது!

‘சீனி’ படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிபெண் நிருபராக வரும் ஓவியாவுடன்., சஞ்சய், பரத்ரவி , ராதாரவி , செந்தில் , ‘பருத்திவீரன்’ சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன் , கஞ்சாகருப்பு , சின்னிஜெயந்த் , வையாபுரி, ரவிமரியா , தாஸ் , டி.பி.கஜேந்திரன், மனோஜ் குமார் , பாவாலட்சுமணன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் , மீரா கிருஷ்ணன் , புவனா உள்ளிட்ட ஒருபெரும் காமெடி பட்டாளமும் , நட்சத்திரப் பட்டாளமும் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Seeni Movie Stills (27)சீதா என்ற யானையும் முக்கிய பாத்திரத்தில் ‘ சீனி’ படத்தில் நடித்துள்ளதும், அதன் பாகனாக காமெடி நடிகர் செந்தில் உருக்கமான பாத்திரம் ஏற்றுள்ளதும், பவர் ஸ்டாருக்கு இப்படத்தில் இரட்டை வேடம் என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது!

‘சீனி’ திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சினேகன் , விவேகா இருவரும் பாடல்கள் எழுத, ராதிகா , பாரதி இருவரும் நடனம் அமைத்திருக்கின்றனர். , சண்டை பயிற்சி – பவர் பாஸ்ட் பாபு , படத்தொகுப்பு – சாய் சுரேஷ், ஒளிப்பதிவு – நாகராஜன் , தயாரிப்பு மேற்பார்வை – ராஜா , தயாரிப்பு – மதுரை ஆர்.செல்வம் , எழுத்து, இயக்கம் – ராஜதுரை .

இத்தனை சிறப்புகளுடனும் 2015-ம் ஆண்டின் இறுதியில், சென்சாரின் ‘யு’ சான்றிதழ் மற்றும் ,தரமான படமெனும் பாராட்டு பத்திரத்துடனும் ., ‘வேலம்மாள்’ சினிகிரியேஷன்ஸ் பேனரில் 2016 – புத்தாண்டு ஜனவரி இறுதிக்குள் திரைக்குவருகிறது ‘சீனி ‘

Back To Top
CLOSE
CLOSE