Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“உல்ட்டா” படத்தின் மூலம் அழகான இளம் நடிகராக அறிமுகமாகும் ரமீஸ் ராஜா

Actor Rameez Raja Stills (5)விரைவில் வெளிவர உள்ள ‘டார்லிங்’ படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பலரது பாராட்டையும் பெற்றுள்ளவர் ரமீஸ் ராஜா. இவருடைய அடுத்த படம் ‘உல்ட்டா’.

அழகான இளம் நடிகரான ரமீஸ் ராஜா தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளார்.

“இந்த நல்ல விஷயம் ‘டார்லிங் 2’ படத்தால் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு நடப்பதற்கு முன்பும் இது நடக்க ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் பெயரும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் தான் காரணம்.

Actor Rameez Raja Stills (3)‘டார்லிங் 2’ விரைவில் வெளியாக உள்ளது. இந்த வெளியீட்டிற்குக் காத்திருக்கும் போதே ‘உல்ட்டா’ படத்தின் கதை என்னைக் கவர்ந்து விட்டது. இயக்குனர் ஏஆர் முருகதாசின் அசோசியேட் இயக்குனரான விஜய் பாலாஜி, எழுத்தாளர் பாலகிருஷ்ணனுடன் இந்தப் படத்தில் இணைந்து இந்த வித்தியாசமான கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.

இந்தக் கதைக்கு உல்ட்டா என்பது பொருத்தமான ஒரு தலைப்பாக இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் தினமும் நடக்கும் விஷயங்கள் எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை. அது மிகவும் நகைச்சுவை உணர்வுடன் சொல்லப்பட்டுள்ளது. ‘சைக்காலஜிக்கல் காமெடியாக ஒரு புதிய வகைப் படமாக இந்தப் படம் அமையும். ரசிகர்கள் முழுவதுமாக இந்தப் படத்தை ரசிக்கும் விதத்தில் படம் இருக்கும். ஜனனி ஐயர் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் அவருடைய நடிப்புத் திறமையை ரசிகர்களுக்கு உணர்த்தும். ரிட்ஸ் மீடியாக ஒர்க்ஸ் நிறுவனம் இந்த ‘உல்ட்டா’ படம் மூலம் திரையுலகத்தில் அடியெடுத்து வைக்கிறது. இம்மாதக் கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது,” என்கிறார் ரமீஸ் ராஜா.

Back To Top
CLOSE
CLOSE