Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி வரும் “டீ கடை ராஜா” திரைப்படம்…

poster.1இத்திரைபடத்தை FUNTOON TALKIES PRODUCTION சார்பில் முருகராஜா என்பவர் தயாரித்திருக்கிறார், இப்படத்தில் ராஜா சுப்பையா இயக்குனர் மற்றும் நாயகனாகவும்,நேகா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள், இவர்களோடு யோகி பாபு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி வரும் இத்திரைப்படம் இறுதி கட்ட பணிகளில் உள்ளது.

இத்திரைபடத்தை பற்றி இயக்குனர் ராஜா சுப்பையா கூறியதாவது
இத்திரைப்படம் காதல் கலந்த “ப்ளாக் காமெடி” வகையைச் சேர்ந்தது, மிகவும் SIMPLE ஆன ஒரு லவ் ஸ்டோரி-ஐ நேடிவிடி மாறாமல் எதார்த்தமாக படமாக்கி உள்ளேன்.

Tea Kadai Raja Movie Stills (5)என்படத்தின் கதாநாயகி நேகா கதாபாத்திரத்தோடு மகிவும் ஒன்றி நடித்துள்ளார் அத்தோடு இல்லாமல் அவர் பார்ப்பதற்கு நயன்தாராவின் தங்கை போல் இருப்பதால் இவரை நான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தேன். இவர் தமிழ்த்திரை உலகில் ஒரு பெரிய ரவுண்டு வருவார்

அதே போல் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்த “யோகி பாபு” அவர்கள் முழு நேர காமெடியனாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் மற்றபடி அனைத்து கதாபத்திரங்களிலும் புதுமுகங்களே நடித்துள்ளனர்.

நான் அடுத்த படத்திற்கான கதையும் தயார் செய்து ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் கூறியபோது அவர் அந்த கதையை ஒப்புக்கொண்டது மட்டுமில்லாமல் இப்படத்தை வாங்கி வெளியிடவும் சம்மதித்துள்ளார்.

Tea Kadai Raja Movie Stills (4)பிப்ரவரி 14 அன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அந்நிறுவனம் இதனை அறிவிக்கபோவதாக கூறியுள்ளது. தனது முதல் படமே மிகப்பெரிய ஒரு நிறுவனத்தால் கவனிக்கப் பட்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒரு தருணத்திற்காக தான் பத்து வருடமாக சினிமாவில் போராடினேன். இப்படத்தில் குறிப்பாக “இண்டர்வல் ப்ளாக்” மற்றும் “கிளைமாக்ஸ்” அதிகம் பேசப்படும், நான் எப்போதும் நம் தமிழ் மக்கள் வாழ்வியல் சார்ந்த கதையையே அதன் எதார்த்தம் மாறாமல் படம் எடுப்பேன், மேலும் கொரியன், ஹாலிவுட் பட DVD யும் பார்ப்பதில்லை என்கிறார் இயக்குனர்.

இப்படத்திற்கு இசை தன்ராஜ் மாணிக்கம், ஒளிப்பதிவு இளன் , படத்தொகுப்பு முத்துராஜ்.
​​

Back To Top
CLOSE
CLOSE