Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நேமிசந்த் ஜபக் – சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்

pizap.com14549394785961நான் அவன் இல்லை, அஞ்சாதே, பாண்டி, மீகாமன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை அளித்த தயாாிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக்கிற்க்காக V.ஹித்தேஷ் ஜபக் தயாாிக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளாா். இப்படத்தினை முதல் பிரதி அடிப்படையில் இயக்குனர் சற்குணம் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான சற்குணம் சினிமாஸ் தயாரிக்கிறது.

இப்படத்தை இயக்குனர் சற்குணமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை நயன்தாரா முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இப்படத்தின் கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்

படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் மேற்கொள்கிறார். விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நகைச்சுவை கலந்த திகிலூட்டும் கிரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கப்படவுள்ளது.

இம்மாதம் முதல் இப்படத்தின் படபிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE