Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

விஜய் ஆண்டனியின் நடிப்பில், ஜீவா ஷங்கர் இயக்கத்தில் ‘எமன்’

Yaman Pooja Stills (9)விஜய் ஆண்டனியின் நடிப்பில், ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய ‘நான்’ படத்தை தொடர்ந்து,அதே கூட்டணி இப்போது மீண்டும்’ எமன்’ புதியப் படம் மூலம் இணைகின்றனர்.தங்களுக்கு என்று திரை உலகில் தனி இடத்தை நிர்மாணித்துக் கொண்ட லைகா productions இந்தப் படத்தை தயாரிக்க உள்ளனர். ‘எமன் ‘படத்தின் துவக்க விழா இன்று லைகா productions நிறுவனத்தின் வளாகத்தில் நடைப் பெற்றது.

லைக்கா நிறுவனத்தின் creative head திரு ராஜு மகாலிங்கம் ‘எமன்” படத்தின் கதையை பற்றிக் கூறும் போது விஜய் ஆண்டனியின் வளர்ச்சியை நாங்கள் எங்களது நிறுவனத்தின் சார்பில் கூர்ந்துக் கவனித்து வருகிறோம்.இந்தப் படத்தை தயாரிக்கும் பொறுப்பு எங்களிடம் வந்தப் போது நாங்கள் சற்றும் தயங்கவில்லை. ஏனென்றால் விஜய் ஆண்டனி- ஜீவாஷங்கர் ஏற்கனவே தங்களை நிரூபித்த கூட்டணி. ‘எமன்’ என்ற தலைப்பு மிகவும் வித்தியாசமான தலைப்புதான். கதையை கேட்ட நொடியே இந்தத் தலைப்புதான் கதைக்கு ஏற்றத் தலைப்பு என்பதை உணர்ந்துக் கொண்டேன். எமன் ஒரு சிவ பக்தர் என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.இதில் ஒரு சுவராசியமான சம்பவம் என்னவென்றால் இந்தப் படத்தை பொறுப்பு என்னிடம் பகிர்ந்துக் கொள்ளப் பட்ட போது நான் ஒரு சிவன் கோவிலில் தான் இருந்தேன்.

‘எமன்’ படப்பிடிப்பு வருகின்ற பத்தாம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடை பெறுகிறது. எமன் ,எங்களது லைக்கா நிறுவனத்தில் மற்றுமொரு மகுடம் என்பதை நிச்சயமாக நம்புகிறேன்’ என்றார்.

Back To Top
CLOSE
CLOSE