Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

விக்னேஷ் நடிக்கும் திகில் படம் “அவன் அவள்”

Avan Aval Movie  Stills (30)காயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி,வி.சுதா விஸ்வநாதன் தயாரிக்கும் படத்திற்கு “ அவன் அவள் “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரிகா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் கணபதி, ஸ்வப்னம், சச்சு, பாவாலட்சுமணன் செவ்வாளை, ஆதிசிவன் சுப்புராஜ்,சின்ராசு, மணிகுட்டி, என்.சி.பி.விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரவி சீனிவாசன், இசை – கார்த்திக் ராஜா, பாடல்கள் – சினேகன், பா.விஜய், கலை – ஆரோக்கியராஜ், நடனம் – கூல்ஜெயந்த், கருணாகரன், ஸ்டன்ட் – தவசிராஜ், எடிட்டிங் – பேட்ரிக் தயாரிப்பு நிர்வாகம் – நாகராஜ், தயாரிப்பு மேற்பார்வை – வீரசிங்கம், இணை தயாரிப்பு – சுதா விஸ்வநாதன், தயாரிப்பு – காயன்ஸ் பிக்சர்ஸ் வி. உமாமகேஸ்வரி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்கிரீஷ் மிரினாளி.

Avan Aval Movie  Stills (13)படம் பற்றி இயக்குனர் ராம்கிரீஷ் மிரினாளியிடம் கேட்டோம்….

இந்த அவன் அவள் படத்தின் கதை இப்பொழுது பல குடும்பங்களில் நடக்கும் உண்மை சம்பவங்கள் தான். கணவன் , மனைவி எப்படி புரிதலுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து அன்புடன் வாழ வேண்டும். அப்படி விட்டுக் கொடுக்காமல் ஒன்றை விட ஒன்றை ஒப்பிட்டு அது உன்னை விட சிறந்தது இது உன்னை விட சிறந்தது என்று பேசி மனதை மாற்றி வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.அப்படி வாழ்த்த ஒருவனின் வாழ்க்கை தான் இந்த படத்தின் திரைக்கதை . படத்தில் கணவன் மனைவி எப்படி வாழவேண்டும் என்பதை இந்த படத்தில் திரில்லர் கலந்து உருவாக்கியுள்ளோம். நடிகர் விக்னேஷுக்கு இது ஒரு திருப்புமுனை படமாக இருக்கும்.

படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் கொடைக்கானலிலும் 20 சதவீதம் சென்னையிலும் நடைபெற்றுள்ளது. படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்றார் இயக்குனர் ராம்கிரிஷ் மிரினாளி.

Back To Top
CLOSE
CLOSE