Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“வில் அம்பு” நாயகன் ஸ்ரீயின் அப்பாவி இமேஜ்யை உடைத்தெறிய போகும் “மாநகரம்”

Actor Sri Stills (3)அப்பாவி இமேஜ்யை உடைத்தெறிய வேண்டும் “வில் அம்பு” நாயகன் ஸ்ரீ

சினிமாவில் வெற்றியின் சிகரம் தொட்டு கொண்டிருக்கிறார் இளம் நாயகன் ஸ்ரீ .”வில் அம்பு“ படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்திலிருந்த ஸ்ரீயை சந்தித்த போது .

தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு தன் முதற்கன் நன்றியை தெரிவித்து கொண்டு பேச ஆரம்பித்தார்

Actor Sri Stills (2)“வழக்கு எண் 18”.” ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” ஆகிய படங்களை தொடர்ந்து “வில் அம்பு“ எனக்கு திரைக்கு வந்திருக்கும் மூன்றாவது படம் . ஒரு முறை இயக்குநர் சுசீந்தரன் அவர்கள் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. இதுவே எங்களது முதல் சந்திப்பும் கூட, அப்போது அவர் புதிதாக ஒரு படம் தயாரிக்க போவதாகவும் அதில் நான் நடிக்க வேண்டும் என்றும் சொன்னார் பிறகு ஒரு நாள் அலுவலகத்திற்கு அழைத்தார்கள் இயக்குனர் ரமேஷ் “வில் அம்பு கதையை சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்தது .ஆனால் இவ்வளவு அழுத்தமான, சவாலான வேடம் ஏற்று நடிக்க இயலும் என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. ரிஹர்சல் பார்த்து எனக்கு திருப்தி வந்த பிறகு தான் படபிடிப்பிற்கு வருவேன் என்று இயக்குனர் ரமேஷ் அவர்களிடம் சொன்னேன். அவரும் அதை ஏற்றுகொண்டார் அதன் படி மூன்று நாட்கள் ஒத்திகை பார்த்த பின்னரே நான் படத்தில் கார்த்தியாக நடிக்க ஆரம்பித்தேன். அது மட்டுமல்லாமல் இயக்குனர் லொக்கேஷன் பார்க்க கோவை சென்ற போது நானும் அவருடன் சென்றேன். படத்தில் பிரதான லோக்கேஷன்களான காந்திபுரம், சிவானந்த காலனி, செல்வபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள கலாசாரங்களையும் புரிந்து கொண்டேன். அந்த பயிற்சிகளை வில் அம்பில் நான் ஏற்ற வேடத்தை ரசிகர்கள் ரசிக்கும்படி அவர்களது பாராட்டு பெறும்விதம் இயல்பாக நடிக்க எனக்கு உதவியது.

Actor Sri Stills (4)படம் வெற்றி பெற்றது என்பதும் மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் திரை அரங்குகுள்ளும் காட்சிகளும் அதிகரித்து கொண்டு இருக்கிறது என்பதும் எனக்கு மகிழ்ச்சியும், மனநிறைவையும் அளிக்கிறது” என்றார் ஸ்ரீ !!

அடுத்து “ மாநகரம்” என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார் ஸ்ரீ. இது ஒரு நகர்புற திர்ல்லர் படமாக உருவாகியுள்ளது தனது முந்தைய படங்களில் தொடர்ச்சியாக அப்பாவி கதாநாயகனாகவே நடித்துள்ள தனக்கு இந்த அப்பாவி இமேஜ்யை உடைத்தெறியும் வேடம் செய்ய ஆவலுடன் காத்திருப்பதாகவும் ஸ்ரீ கூறினார்

Back To Top
CLOSE
CLOSE