Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நகைச்சுவை கலந்த சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகும் “உத்தரவு மகாராஜா”

pizap.com14558619168981இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது, “இளைய திலகம்”பிரபுவோடு உதயா இணையும் “உத்தரவு மகாராஜா”

திருநெல்வேலி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணையும் இப்படத்தில் பிரபு இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பில் தோன்ற இருக்கிறார்.

Utharavu Maharaja Movie Actor Udhaya Photosஇப்படத்திற்காக பிரத்யேகமாக உடலை மெலிய செய்தும் மொட்டை அடித்தும் தாடி வைத்தும் மூன்று விதமான கதா பாத்திரங்களில் நடிக்க இருக்கிறார் உதயா.

இவர்களுடன் கோவைசரளா, ஸ்ரீமன், மன்சூரலிகான், மனோபாலா, அஜய்ரத்னம் மற்றும் பல நட்சத்திரங்களுடன் நீண்ட இடை வெளிக்கு பின் குட்டிபத்மினி நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மற்ற நடிகர் நடிகையர் தேர்வு தற்போது நடந்துக்கொண்டிருக்கிறது.

ஸ்டார் விஷன் சார்பாக கணேஷ் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இயக்குனராக ஆஸிப் குரைஷி அறிமுகமாகிறார். இவர் தமிழ் இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். ஏராளமான விளம்பர படங்களை இயக்கி கொண்டிருப்பவர்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா. இவர் தமிழில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மற்றும் பல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்.

புதிய இசையமைப்பாளர் இப்படத்தில் அறிமுகமாகிறார். எடிட்டிங் டான் பாஸ்கோ. சண்டை பயிற்சி தளபதி தினேஷ்.

பாடல்களை நா.முத்துகுமார் எழுத, நடனத்தை சின்னி பிரகாஷ் அமைக்க, தயாரிப்பு நிர்வாகத்தை தேனி சங்கர் கவனிக்கிறார். மக்கள் தொடர்பு நிகில்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் மார்ச் 24-ஆம் தேதி கோவையில் தொடங்கி ஏப்ரல் 15 வரை ஊட்டியில் நடைபெற உள்ளது.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடை பெறும்.

இப்படத்தின் சிறப்பம்சம் யாதெனில் திரைக்கதையில் ஒரு புதிய முயற்ச்சியை இயக்குனர் கையாண்டிருக்கிறார்.மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை கலந்த சைக்கோ த்ரில்லர் கதை இது.

Back To Top
CLOSE
CLOSE