ஆடு முக்கிய வேடத்தில் நடித்த “ ஆட்டு கார அலமேலு, மாடு நடித்த “ கோமாதா என் குல மாதா “ யானை நடித்த நல்ல நேரம், அன்னை ஒரு ஆலயம், கும்கி, பாம்பு நடித்த நீயா, வெள்ளிக்கிழமை விரதம், நாகம், ஈ முக்கியமாக நடித்த நான் ஈ, கோழி நடித்த ஆடுகளம், கழுதை பங்கேற்ற பஞ்ச கல்யாணி, நாய் நடித்த நாய்கள் ஜாக்கிரதை, குதிரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற அழகர் சாமியின் குதிரை போன்ற படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது.
இவைகளை தொடர்ந்து குட்டி வெள்ளை பன்றி முக்கிய கதாபாத்திரம் ஏற்று ஜெட்லீ என்ற டைட்டில் ரோலில் நடிக்கிறது. நகைச்சுவை நாயகர்களாக நடிக்கிறார்கள் கண்ணன் பொன்னையா, ஜெகன் சாய் இருவரும். கெளதம் மேனன் உதவியாளராக பணியாற்றியவர் கண்ணன் பொன்னையா.
கதாநாயகிகளாக என்னை அறிந்தால், உத்தமவில்லன் படங்களில் நடித்த பார்வதி நாயர், விஜய் ஆண்டனி நடிக்கும் சைத்தான் படத்தில் நடிக்கும் அருந்ததி நாயர் இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் பவன், மிப்பு, ஸ்டன்ட் நரேன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – துலிப் குமார். இவர் என்னை அறிந்தால் படத்தில் ஒளிப்பதிவாளர் டேன் மெக்கார்தரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இசை – சத்யா. இந்த ஜெட்லி திரைப்படத்தில் இசையமைப்பாளர் சத்யா நான்கு புதிய பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்துகிறார்.
கலை – குருராஜ், வசனம் – நாராயணன், ஸ்டன்ட் – நைப் நரேன், எழதி இயக்குபவர் – ஜெகன்சாய், தயாரிப்பு – ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து ஒண்டர் லேண்ட் மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள்.
மக்களுக்கு அறியாமை தலை விரித்தாடுகிறது. அபசகுனம், சுபசகுனம் என்று சகுனங்களின் மேல் அதிக நம்பிக்கை வைத்துத் தான் மக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை காசாக்க நினைக்கும் இருவரின் நகைச்சுவை கலாட்டா தான் “ ஜெட்லீ “
ஹாலிவுட் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள். நார்னியா, லயன் போன்ற படங்களின் மாடல் அனிமேட்டர் இதில் பணிபுரிகிறார்.
மிக உயரிய தொழில்நுட்பத்துடன் ஜெட்லீ உருவாகிறது. காமெடிதான் படத்தின் உயிர் நாடி. சென்னை, திருநெல்வேலி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார் இயக்குனர் ஜெகன் சாய்.