Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

‘தோழா’ படத்திற்காக அனிருத் பாடிய ‘தோழா என் உயிர் தோழா’ பாடல்…

thozhaஇன்றைய இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக , இசை உலகில் கொடிக் கட்டி பறக்கும் அனிருத் தொடர்ந்து வெற்றி படங்களில் பணி புரிந்து வருகிறார்.சமீபத்தில் காதலர் தினத்தன்று வெளி ஆன அவரது ஆல்பம் ஒன்றும் இளைஞர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவர் இப்போது நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா,ஆகியோர் நடிக்க பி. வம்சி இயக்கும், கோபி சுந்தர் இசை அமைக்கும் , பி வி பி சினிமா தாயாரிக்கும் ‘தோழா’ படத்தில் டைட்டில் பாடல் ஒன்றை பாடி உள்ளார்.

‘தோழா’ இரு வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வரும் இரு நண்பர்களை பற்றியக் கதை.அந்த நடப்பை பிரதிபலிக்கும் பாடல் ஒன்றை தலைப்பு பாடலாக பதிவு செய்ய எண்ணினோம். அந்தப் பாடலை இளைஞர்களிடம் பிரபலமான அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என இயக்குனரும் , இசை அமைப்பாளரும் முடிவெடுத்தார்கள். உடனே அனிருத்தை அணுகினோம், அவரும் சற்றும் தயக்கம் இன்றி ஒப்புக் கொண்டார்.’தோழா என் உயிர் தோழா’ என்றுத் துவங்கும் இந்தப் பாடல் , இனி வரும் காலங்களில் தோழமையை குறிக்கும் பாடலாக இருக்கும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம். ‘தோழா’ படத்தில் பாடல்கள் மிக மிக இனிமையாக வந்து இருக்கிறது. இந்த மாதம் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் இசை வெளியீட்டு விழா நடை பெற உள்ளது’ என பெருமிதத்துடன் கூறினார் பி வி பி சினிமா , ராஜீவ் காமினேனி.

Back To Top
CLOSE
CLOSE