Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சவாரி படத்துக்குப் பிறகு எனது மார்க்கெட் சும்மா கும்மென்று உயரும் – நாயகி சனம் ஷெட்டி!

Actress Sanam Shetty Gallery (9)உயரமான அழகிய — தென்னிந்திய அழகிப் போட்டி 2016 இல் இரண்டாம் இடத்துக்கு வந்த — இந்த நடிகை, , தான் நடித்திருக்கும் சவாரி படம்மிக நன்றாக வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்.

படம் பற்றி உற்சாகத்தோடு பேசும்போது “சவாரி படம் எனக்கு மிக ஸ்பெஷலான படம் . இது முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் பாணி படம் என்று நான் சொல்வேன் . மிக வித்தியாசமான ஸ்டைலில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை .
.
இயக்குனர் குகனும் ஒளிப்பதிவாளர் செழியனும் சிறப்பாக பணியாற்றி , குறைந்த கால கட்டத்தில் மினிமம் பட்ஜெட்டில் மிக சிறப்பான ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார்கள்

படத்தில் ஹீரோ பெனிட்டோவின் காதலியாக நான் நடித்துள்ளேன் . கதைப்படி கல்யாணத்தை நோக்கி முன்னேறும் அந்தக் காதலில், திருமண தினத்தன்று கதை வேறு கோணத்தில் விரியும் . பல எதிர்பாராத சுவாரஸ்யமான திருப்பங்கள் நிகழும் .

படத்தில் இடம் பெறும் ஒரு டூயட் பாடலுக்காக நான் கடலில் கட்டுமரத்தில் பயணிக்க வேண்டி இருந்தது. அதற்கு முன்பு நான் கட்டுமரத்தை பார்த்த மாதிரி கூட இல்லை . எனக்கு அது தான் முதல் கட்டுமரப் பயணம். . அந்த ஷூட்டிங் முழுக்க நான் கட்டு மரத்தில் இருந்து தவறி கடலுக்குள் விழப் போவதும் , ஒவ்வொரு முறையும் பெனிட்டோ என்னை இழுத்து பிடித்து கட்டு மரத்துக்குள் அமர வைப்பதுமாக … யப்பப்பா ! நான் ரொம்ப பயந்து போய் விட்டேன் . என்னால் மறக்க முடியாத அனுபவம் அது .

அப்புறம்…..

Actress Sanam Shetty Gallery (5)சினிமாவில் என்னுடைய ரோல் மாடல் ஸ்ரீதேவிதான். அவங்களோட தீவிர ரசிகை நான். அவர்களைப் பார்த்து வியந்த சந்தர்ப்பங்கள் எத்தனையோ .. இன்னும் சொல்லப் போனால் அவரைப் போலவே நடிக்கக் கூட முயல்கிறேன்

நடிப்பில் என்னுடைய திறமையை வெளிப்படுத்தும்படியான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் .

இன்னும் மாதவன்தான் என்னைப் பொறுத்தவரை எனக்கு சாக்லேட் பாய். இறுதிச் சுற்று படத்தின் மூலம் தனது நல்ல பெயரை பல மடங்கு அதிகரித்துக் கொண்டு இருக்கிறார் அவர் .

எங்களது சவாரி படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நன்றி . இதன் மூலம் எங்களுக்கு ஒரு பெரிய சக்தி கிடைத்துள்ளது . அவர்கள் எங்கள் படத்தை கண்டிப்பாக அடுத்த உயராத்துக்கு எடுத்துப் போவார்கள்.

தரமான படங்களுக்கு ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு எங்கள் சவாரி படம் ரொம்ப பொருத்தமான ஒன்று.

எங்கள் படத்தின் டீசரை வெளியிட்டுக் கொடுத்து எங்களை ஆதரித்த நடிகர் ஆர்யாவின் அன்புக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது . ரொம்ப நன்றி ஆர்யா . சவாரி படம் மார்ச் மாத மத்தியில் திரைக்கு வருகிறது . அதன் பிறகு எனது மார்க்கெட் சும்மா கும்மென்று உயரும் என்பது உறுதி ” என்கிறார், நம்பிக்கையோடு!

Back To Top
CLOSE
CLOSE