Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

பிச்சைக்காரன் படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

Pichaikkaran Movie Stills (75)‘கலைச் செல்வன்’ விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் படத்தின் மீதான ரசிகர்களின் ஆவல், நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து கொண்டே போவது , நிஜமாகவே ஒரு ஆவேசமான கடல் அலையைப் பார்ப்பது மாதிரியான உணர்வைத் தருகிறது .

படத்தின் அட்டகாசமான டீசர் மற்றும் கொண்டாட வைக்கும் டிரைலர் , குறும்பு கொப்பளிக்கும் புரோமோ வீடியோ இவற்றை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி எகிறிக் கொண்டே போகிறது என்றால்,

அதற்கேற்ப படம் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

இதுவரை தமிழ் நாட்டில் மட்டும் 260 திரையரங்குகள் போடப்பட்டு உள்ளது . இது அதிகரித்துக் கொண்டு இருப்பது ஒருபக்கம் இருக்க, மற்ற மாநிலங்களும் உலகின் மற்ற பகுதிகளிலும் மேலும் மேலும் ஒப்பந்தமாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை இதுவரை பாராத ஒன்றாக இருக்கிறது இது தமிழ் சினிமா உலகின் ஒட்டு மொத்த கவனத்தையும் கவர்ந்து உள்ளது .

Pichaikkaran Movie Stills (9)படத்தை வெளியிடும் கே ஆர் பிலிம்ஸ் சரவணன் இது பற்றிக் கூறும் போது ” பிச்சைக்காரன் படத்தை திரையிடும் தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகி வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது . அளவில்லாத ஆதரவு எங்களுக்கு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. படத்தை திரையிடக் கேட்கும் தியேட்டர் அதிபர்களின் அழைப்புகளால் எங்கள் போன்கள் தொடர்ந்து பிசியாகவே இருக்கிறது.

விஜய் ஆண்டனி சார் நடித்து வெளியான அந்த புரமோஷனல் டீசர் வீடியோ , ரசிகர்களின் மனதில் கும்மென்று பற்றிக் கொள்ள, ‘இது பார்த்தே ஆகவேண்டிய படம்’ என்ற முடிவுக்கு ரசிகர்கள் ஏக மனதாக வந்து இருப்பது புரிகிறது .

படத்தை பார்த்த அனைவரும் விஜய் ஆண்டனியின் மிக சிறப்பான நடிப்பையும் , ஒரு கமர்ஷியல் டைரக்டராக இயக்குனர் சசி பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்து இருப்பதையும் மனதார வாயார மாய்ந்து மாய்ந்து பாராட்டித் தள்ளுகிறார்கள்.

இதே போல அனைத்து மீடியாக்களும் கூட தங்களது சக்தி வாய்ந்த ஆதரவை எங்களுக்கு முழுமையாகக் கொடுத்து, படத்தின் மாபெரும் வெற்றிக்கு உதவுவார்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம் ” என்கிறார் உற்சாகத்தில் உச்சியில் நின்றபடி !

Back To Top
CLOSE
CLOSE