Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் “மீன் குழம்பும் மண்பானையும்”

kamal_jpg_2110248fநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இளைய திலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் உலக நாயகன் டாக்டர். கமல்ஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இது நடிகர் திலகத்தின் மீதும், அவர்கள் குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே சாத்தியமானதாக மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து திரும்பி இருக்கும் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் இத்திரைப்படத்தில் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, M.S.பாஸ்கர், சந்தானபாரதி, R.S.சிவாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். அமுதேஷ்வர் இயக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை J.லக்ஷ்மண் குமாரும், படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவினும் கலையை M.பிரபாகரனும், தயாரிப்பு மேற்பார்வையை S.ஆனந்த் வாண்டையாரும், கள தயாரிப்பை RS. சிவாஜியும் கவனிக்கிறார்கள்.

Back To Top
CLOSE
CLOSE