Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பிரபுதேவா தயாரிக்க ஜெயம்ரவி நடிக்கும் “போகன்”

பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ போகன் “

சென்ற வருடம் வசூலில் அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் நாயகன் ஜெயம்ரவி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், எடிட்டர் ஆண்டனி, மாஸ்டர் திலீப்சுப்பராயன், வசனகர்த்தா சந்துரு, பாடலாசிரியர்கள் மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ் ஆகியோர் போகன் படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

தனி ஒருவன் படத்தின் சூப்பர் ஹிட் கூட்டணியான ஜெயம்ரவி – அரவிந்த்ஸ்வாமி கூட்டணியும் கூடுதல் பலம் சேர்க்கிறது போகனுக்கு.

இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18 ம் தேதி பெரம்பூர் பின்னிமில்லில் துவங்குகிறது. பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

ரோமியோ ஜூலியட் படத்தில் சூப்பர் ஹிட் பாடல் டண்டணக்கா.. போகன் படத்தில் “ டமால் டுமீல் “ என்ற பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. 20 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. மிக பிரமாண்டமான படமாக பிரபுதேவா தயாரிக்கிறார்.

Back To Top
CLOSE
CLOSE