Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

முதன் முறையாக ராகவா லாரன்ஸ் பாடிய பாடல்!

Motta Siva Ketta Siva Movie Stills (1)முதன் முறையாக ராகவா லாரன்ஸ் பாடிய பாடல், சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க, வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் உலகம் முழுவதும் வெளியிடும், படம் “ மொட்ட சிவா கெட்ட சிவா “

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சாய்ரமணி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் அம்ரிஷ் இசையமைப்பில் ராகவா லாரன்ஸ் முதன் முறையாக “லோக்கல் மாஸ்“ என்று தொடங்கும் ஒரு பாடலை சுசித்ராவுடன் இனணந்து பாடி இருக்கிறார். இதே பாடலை பாஸ்ட் பீட்டில் பாடகர் திப்புவும், பாடகி மாலதியும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

ஸ்லோ பீட்டிலும், பாஸ்ட் பீட்டிலும் இரண்டு விதமாக பதிவு செய்யப்பட்ட இந்த இரண்டு பாடல்களும் வரும் ஞாயிறு அன்று சிங்கிள் ட்ராக்காக வெளியிடப்படுகிறது. இந்த இரண்டு விதமான பாடல்களில் எதை மக்கள் அதிகம் விரும்புகிறார்களோ அந்த பாடல் படமாக்கப் படும்.

மோஷன் போஸ்டரும் அன்றே வெளியிடப்படுகிறது. அந்த மோஷன் பிக்சர்ஸ் பார்த்து அதில் ராகவா லாரன்ஸ் பேசிய வசனத்தை அதே மாடுலேசனில் பேசியோ, அல்லது பேசி நடித்தோ [email protected] என்ற மின் அஞ்சலுக்கு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அனுப்பவும். பத்து வயதிற்குட்பட்ட போட்டியாளர்கள் மட்டுமே அனுப்ப வேண்டும். அதில் எது சிறந்ததோ அதை தேர்ந்தெடுத்து அந்த குழந்தைக்கு ராகவா லாரன்ஸ் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவார்.

Back To Top
CLOSE
CLOSE