Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

அதீத பணம் வாழ்க்கைக்கு வரமா? சாபமா? என்பதை தெளிவுப்படுத்த வருகிறது ‘பைசா’ திரைப்படம்.

Paisa Poster“காசு,பணம், துட்டு, மணி, மணி!!” என்ற வரிகளுக்கேற்ப இன்றைய கால சூழ்நிலை மாறிவருகிறது (இல்லை) மாறிவிட்டது என்றே சொல்லலாம். மனித வாழ்க்கையில் பணம் அத்தியாவசம் என்றாலும், அதுவே வாழ்க்கையாகிவிட்டால் நரகம்தான் மிஞ்சும் என்பதற்க்கேற்ப்ப உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘பைசா’. இளைய தளபதி விஜய் நடிப்பில் ‘தமிழன்’ திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். சென்னை சிறுவர்களை மையமாக கொண்ட ‘கோலி சோடா’ மற்றும் ‘காக்கா முட்டை’ தரவரிசையில் இந்த திரைப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Paisa Movie Stills (3)‘பசங்க’, ‘கோலி சோடா’ புகழ் ஸ்ரீ ராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை Confident பிலிம் கபே, KJR ஸ்டுடியோஸ், RK ட்ரீம் வேர்ல்ட் மற்றும் இனைத்தயாரிப்பாளர் கராத்தே K ஆனந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர்.அறிமுக நடிகை ஆரா, நடிகர்கள் நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாப்பாதிரங்களில் நடித்துள்ளனர். K.P. வேல்முருகனின் ஒளிப்பதிவும், J.V. இசையும் படத்தை மென்மேலும் மெருகேற்றும் என்று எண்ணலாம். “என்னுடைய கதையம்சம் முழுக்க முழுக்க நிஜ வாழ்க்கை அனுவங்களை சார்ந்ததாகதான் இருக்கும். ஒரு சராசரி சினிமாவாசியின் மனதில் இந்த திரைப்படம் இடம் பெற்றால் தான், என்னால் அதை முழுமையான வெற்றியாக உணர முடியும்” என்கிறார் அப்துல் மஜீத்.

Back To Top
CLOSE
CLOSE