Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

கல்லூரி காதல் கதையாக உருவாகிறது “ இணைய தலைமுறை.

கல்லூரி காதல் கதையாக உருவாகிறது
“ இணைய தலைமுறை “
மாறன் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பெ.இளந்திருமாறன் தயாரிக்கும் படத்திற்கு “ இணைய தலைமுறை “ என்று பெயரிட்டுள்ளார்.
நாயகனாக அஸ்வின் குமார் நடிக்கிறார். இவர் டூரிங்டாக்கீஸ், மாதவனும் மலர்கொடியும் “ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் சரத்குமார் மகளாக நடித்தவர். அத்துடன் நண்பர்கள் கவனத்திற்கு, விந்தை போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் ரவி, சத்யன், சிவகுமார், சர்மிளா, சஞ்சய், சரத், வனகைதி, தென்னவன் ராஜேந்திரநாத் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆரோ
இசை – T.J.கோபிநாத்
பாடல்கள் – இளையகம்பன், பெ.இளந்திருமாறன்
கலை – தியாகு
நடனம் – ரமேஷ் கமல்
ஸ்டன்ட் – ஆர்.கே.முரளி
எடிட்டிங் – வில்ஸி
தயாரிப்பு – அம்பிகா முஜீப்
கதை, தயாரிப்பு, இணை இயக்கம் – பெ.இளந்திருமாறன்
திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – சு.சி.ஈஸ்வர். இவர் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..
கல்லூரி வாழ்க்கை என்பது சுவாரஸ்மானது. அது மட்டுமல்ல உல்லாச பறவைகளாக பாடித் திரிந்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்கையில் பேஸ்புக், டிவிட்டர் போன்றவை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும், அதில் காதல், மோதல், சென்டிமென்ட், காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம்.
படப்பிடிப்பு ராஜபாளையம், ஸ்ரீ வில்லிப் புத்தூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது என்றார் இயக்குனர்.

Back To Top
CLOSE
CLOSE