Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் !.

நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் ! வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குகிறது

பிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ் பல்கலைக்கழகம்” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான திரு.நாசர் அவர்களுக்கு அவரது கலைச் சேவையைப் பாராட்டி “டாக்டர் பட்டம்” வருகிற 7ம் தேதி காலை 9 மணியளவில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வழங்கி கௌரவிக்க உள்ளது. தனது 6 வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்கையை துவங்கிய நாசரை 1985 ஆம் ஆண்டு இயக்குனர் K.பாலசந்தர் அவர்கள் “கல்யாண அகதிகள்” என்ற திரைபடத்தில் நடிகராக அறிமுகபடுத்தினார். தொடர்ந்து கடந்த 30 வருடங்களில் தமிழ்,ஆங்கிலம்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் கலையுலக பயணத்தை தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இவ்விழா வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழாவாகும். இவ்விழாவிற்கு வேல்ஸ் பல்கலைகழக நிறுவன வேந்தர் டாக்டர். ஐசரி k.கணேஷ் தலைமையேற்று அவருடன் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.ஜெஸ்டி செலமேஸ்வர் சிறப்பு விருந்தினராக உரையாற்ற, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மாண்புமிகு டாக்டர் .P.S.சவ்ஹான் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்க உள்ளார்

Back To Top
CLOSE
CLOSE