Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தனது தாய்க்கு ஒரு கோவில் தாய் சிலையை தாய்க்கே பரிசளித்தார் ராகவா லாரன்ஸ்

தனது தாய்க்கு ஒரு கோவில்
தாய் சிலையை தாய்க்கே பரிசளித்தார் ராகவா லாரன்ஸ்
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அம்பத்தூரில் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் கட்டி உள்ளார். அந்த கோவில் எதிரிலேயே அவரது தாய் கண்மணிக்கு கோயில் கட்டிக் கொண்டிருக்கிறார் அது நிறைவடையும் கட்டத்தில் உள்ளது.
இந்த கோயில் இன்னும் இரண்டு மாதங்களில் திறக்கப்பட உள்ளது. கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த கோவிலின் புகைப்படத்தையும் ராஜஸ்தானில் வடிவமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் எனது தாயாரின் சிலையின் புகைப்படத்தையும் இன்று அன்னையர் தினத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் லாரன்ஸ். உலகிலேயே உயரிய மந்திரமாக கருதப்படுவது காயத்திரி மந்திரம் அதனால் அந்த கோவில் கருவறையில் காயத்திரி தேவிக்கு திரு உருவ சிலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த சிலைக்கு கீழே எனது தாய் கண்மணி தியானம் செய்வது போன்ற சிலை ஒன்று வைக்கிறேன். தெய்வத்துக்கு நிகரானவர் தாய்மட்டுமே அதனால் ஒரே கருவறையில் தெய்வத்தையும், தாயையும் சிலையாக வைக்கிறேன். அந்த சிலை ராஜஸ்தானில் பளிங்கு கற்களால் தயாராகிக் கொண்டிருக்கிறது.
என்னை கருவில் சுமந்து காப்பாற்றிய எனது தாய்க்கு கருவறையில் சிலை வைத்து பெருமை படுத்த வேண்டும் என்பதை எனது லட்சியமாக கொண்டிருந்தேன். தாயின் பெருமையை, அருமையை உலகத்திற்கு சொல்லவே நான் இந்த கோவிலை கட்டிக்கொண்டிருக்கிறேன்.
உலகிலேயே தாய்க்கு கோவில் அதுவும் தமிழ்நாட்டில், என்பதில் நான் பெருமைகொள்கிறேன். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்து.. சிரமப்பட்டு எங்களை வளர்த்து ஆளாக்கிய அந்த தாய்க்கு இதே தமிழ்நாட்டில் கோவில் கட்டுவதுதானே நியாயம்.
இன்று என்னோட அம்மா நடைப்பயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள் அப்போது செல்போனில் இருந்த அவரது சிலையின் புகைப்படத்தை காட்டும்போது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் மற்றும் எனது சகோதர் எல்வின்னும் அனைவரும் பார்த்து மகிழ்ந்தார்கள்..

(8 ம் தேதி) உலக அன்னையர் தினம்..இந்த கோவிலை உலகில் உள்ள எல்லா தாய்கும் சமர்பணம் செய்கிறேன் என்று ராகவா லாரன்ஸ் கூறினார்.

Back To Top
CLOSE
CLOSE