Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

.எனக்கு ஒரு நடிகனாக முகவரி தந்த பாலா சாருக்கு வாழ் நாள் முழுக்கக் கடமை பட்டு இருக்கிறேன் ‘

ஒரு நாயகரை அறிமுகம் செய்வது என்பது வேறு , ஒரு நடிகரை உருவாக்குவது என்பது வேறு.. அந்த வகையில் இயக்குனர் பாலா நடிகர்களை உருவாக்குவதில் முன்னோடி என்றே சொல்லலாம்..அவர் உருவாக்கிய நடிகர்கள் வெறுமனே நடிகர்கள் என்ற அடை மொழியை தாண்டி கதாப் பாத்திரங்களாகவே மாறும் தன்மையை கொண்டு இருப்பார்கள். சியான் விக்ரம் , சூர்யா, அதரவா, ஆர்யா, விஷால் என்று நீளும் இந்தப் பட்டியலில் தற்போது ‘தாரை தம்பட்டை’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி , தற்போது வெளி வந்து வெற்றிகரமாக் ஓடிக் கொண்டு இருக்கும் ‘மருது ‘ படத்தில் வில்லனாக வந்துக் கலக்கும் ஆர் கே சுரேஷும் இணைகிறார்.
குறைந்தக் காலக் கட்டத்தில் சிறந்த தயாரிப்பு நிறுவனம் என்று தனது நிறுவனமான ஸ்டுடியோ 9 நிறுவனத்துக்கு பெயர் ஈட்டி தந்த சுரேஷ் நடிப்பின் மேல் உள்ள தனது காதலால் , இன்று எல்லோரும் மெச்சும் ஒரு நல்ல வில்லனாக உரு எடுத்து இருக்கிறார்.நம்பியார், வீரப்பன் முதல் ரகுவரன் , பிரகாஷ் ராஜ் வரை நல்ல வில்லன் நடிகர்களை வரவேற்கும் தமிழ் திரைப் பட உலகம் இவருக்கும் தரை தம்பட்டையுடன் இரத்தின கம்பள வரவேற்ப்பு கொடுத்து இருக்கிறது. சமீபமாக நமது நேட்டிவிட்டிக்கு பொருந்தாத வட இந்திய வில்லன்களைபார்த்து சலித்து வரும் தமிழ் ரசிகர்கள் , ஆக்ரோஷமான நடிப்பை வெளிப் படுத்தும் தனக்குக் கொடுக்கும் வரவேற்ப்பை கண்டு நெகிழ்ந்துப் போய் இருக்கிறார் சுரேஷ்.

‘எனக்கு கிடைத்து இருக்கும் இந்த வரவேற்ப்பு எனக்கு உற்சாகம் தந்த அளவுக்குபொறுப்பும் கொடுத்து இருக்கிறது என்றுத் தான் சொல்லுவேன்.இந்த அந்தஸ்து எனக்கு ஒரு நாளில் வந்தது இல்லை. கடினமான உழைப்பும் , தீராத நடிப்பு பசிதான் காரணம் என்பேன்.நான் ஒரு இயக்குனரின் நடிகனாக தான் இருக்க விரும்புகிறேன்.எனக்கு ஒரு நடிகனாக முகவரி தந்த பாலா சாருக்கு வாழ் நாள் முழுக்கக் கடமை பட்டு இருக்கிறேன் ‘ என்று தன முறுக்கு மீசையை தடவிய படிக் கூறினார் ஆர் கே சுரேஷ்.

Back To Top
CLOSE
CLOSE