இது நம்ம ஆளு.
டி,ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும் இது நம்ம ஆளு படத்தில் சிலம்பரசன் பிரபல தெலுங்கு பட நாயகி ஆஷாசர்மா நடித்த டி.ராஜேந்தர் – சுசித்ரா பாடிய மாமா வெயிட்டிங் என துவங்கும்
பாடல் பிரம்மாண்ட அரங்கில் பல கோடி ருபாய் செலவில் படமாக்கபட்டது,இப்பாடலில் சிலம்பரசன் சுமார் 90 விநாடிகள் ஒற்றைகாலில் நடனமாடி அனைவரது பாராட்டுதலையும் பெற்றார்.திரையில் இந்த காட்சியை பார்க்கும் அனைவரும் இந்த 90
நிமிடமும் இருக்கையில் அமராமல் எழுந்து நின்று கைதட்டி கொண்டே இருப்பார்கள், இந்த பாடலை படத்தில் வைக்க கூடாது என எவ்வளவோ வழிகளில் தடுத்து பார்த்தும் தயாரிப்பாளர் டி,ஆர்,இப்பாடலை வைத்தே தீர வேண்டுமென தீர்மானித்து ரூபாய் 2கோடி செலவில் மிகபிரம்மாண்டமாக படமாக்கியுள்ளார்.சிலம்பரசன்,நயன்தாரா. ஆன்ரியா,சூரி.சந்தானம்,கவுரவ வேடத்தில் ஜெய், ஆகியோரும் நடித்துள்ளனர் இப்பாடலுக்கு டி.ஆர்.குறளரசன் இசையமைத்துள்ளார்.பாண்டிராஜ் இயக்கியுள்ள இபபடத்தின் இணைதயாரிப்பு உஷா ராஜேந்தர், இம்மாதம் 27ந்தேதி இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிறது,.