தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார் ‘யூ டர்ன்’ கதாநாயகி ஷரதா ஸ்ரீநாத்
கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற வெற்றி திரைப்படம், ஷரதா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்த ‘யூ டர்ன்’. இந்த படத்தின் மூலம் பலரின் பாராட்டுகளை பெற்று, மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த ஷரதா, தற்போது பிரேமம் புகழ் நிவின் பாலியுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.மிஷ்கினின் இணை இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இந்த படத்தை இயக்குவது, ஷரதாவிற்கு கூடுதல் பலமாக அமையும் என்றே சொல்லலாம். அது மட்டுமில்லாமல் இதுவரை நிவின் பாலியுடன் ஜோடி சேர்ந்த கதாநாயகிகள் அனைவரும் வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதால், ஷரதாவும் அந்த வரிசையில் இடம் பிடிப்பார் என்று அதிகளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“ராணுவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தினால், எனக்கு பல தரப்பு மக்களுடன் பேசி பழகும் சூழ்நிலையும், பல்வேறு மாநில மக்களின் கலாச்சாரங்களை கற்று கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது. அடிப்படையில் சட்டம் பயின்று, வழக்கறிஞராக பணிப்புரிவதால், வாழ்க்கையின் மதிப்புகளையும், சவால்களையும் நான் நன்கு அறிவேன். இது ஒரு புறம் இருந்தாலும், நாளுக்கு நாள் எனக்கு சினிமாவின் மேல் இருக்கும் ஈர்ப்பு அதிகமாகி கொண்டே போனது. அதுவே என்னை நடிப்பை மேம்படத்தும் தியேட்டர் கலைகளில் கவனம் செலுத்தி, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்தது. அந்த அனுபவங்கள் தான் எனக்கு யூ டர்ன் என்னும் கன்னட படத்திலும், தற்போது புதுமுக இயக்குனர் கௌதம் இயக்கும் இந்த தமிழ் படத்திலும் நடிக்க வாய்ப்பு வாங்கி தந்தது. பெங்களூரில் பிறந்த எனக்கு தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழ் சினிமா மீதும் ஒரு தனி மரியாதை உண்டு. இந்த படத்தின் மூலம் என்னை தமிழ் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று சிறிய புன்னகையுடன் விடை பெறுகிறார் அறிவும் அழகும் ஒருங்கே பெற்ற ஷரதா ஸ்ரீநாத்.