திகிலூட்டக்கூடிய அடர்ந்த காட்டுப்பகுதியில் ‘ரம்’ திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்பு
ஏற்கனவே ரம் திரைப்படத்திற்காக இளம் இசையமைப்பாளர் அனிரூத் உருவாக்கிய ஹோலா ஹோலா அமிகோ பாடல் அனைத்து இள வட்டாரங்களையும் கவர்ந்துள்ள நிலையில், தற்போது இந்த படக்குழுவினர் மீண்டும் அனைத்து இளைஞர்களையும் ஈர்க்கும் விதமாக தங்கள் படத்தின் மற்றொரு பாடலை திகிலூட்டக்கூடிய அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கியுள்ளனர். புதுமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி, ஆல் இன் பிச்சர்ஸ் விஜயராகவேந்திரா தயாரித்து வழங்கும் இந்த ‘ரம் படத்தில் ஹ்ரிஷிகேஷ்,விவேக், சஞ்சிதா ஷெட்டி, நரேன், மியா ஜார்ஜ், அம்ஜத் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் அஜித்தின் புகழ் பெற்ற பாடலான ‘அதாரு அதாரு’ பாடலுக்கு நடன கலைஞராக பணிப்புரிந்த சதீஷ், இந்த பாடலுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்திருப்பது தனி சிறப்பம்சம். மேலும் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் இந்த பாடலுக்காக நடனம் ஆடியிருப்பது அனைவரின் ஆர்வத்தையும் தூண்டுகிறது. சமீபத்தில் கலிபோர்னியாவை சேர்ந்த, உலக புகழ் பெற்ற டி.ஜே இசை கலைஞர் டிப்ளோ, ‘ஹோலா ஹோலா அமிகோ’ பாடலுக்கு தனதுபாராட்டுகளை டிவிட்டர் வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் வெளிவரும் இந்த பாடலுக்கு கண்டிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது .