Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அனைத்து மொழிகளிலும் முத்திரை பதித்த இயக்குனர் பி.வாசு

அனைத்து மொழிகளிலும் முத்திரை பதித்த இயக்குனர் பி.வாசு

குடும்பம் குடும்பமாக வசிகரித்து தனது படங்களை விரும்பி பார்க்கவைப்பது ஒரு கலை என்றால், அனைத்து தர ரசிகர்களின் விருப்பமும் பூர்த்தி செய்யும் வகையில் படங்களை எடுப்பது மற்றொரு கலை. இவ்விரண்டு கலைகளிலும் கைதேர்ந்தவர் இயக்குனர் பி.வாசு.

ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, அஜீத் என பல முன்னனி நட்சத்திரங்களுடன் பணியாற்றி பணக்காரன், சின்னதம்பி, வால்டர் வெற்றிவேல், சந்திரமுகி என பலதரப்பட்ட உணர்ப்பூர்வமான திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் பி.வாசு.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் இவர். சமிப காலங்களில் கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடிப்பில் அப்தரக்ஷகா, உபேந்திரா நடிப்பில் அரக்ஷகா, ரவிச்சந்திரன் நடிப்பில் திர்ஷ்யா, சிவராஜ் குமார் நடிப்பில் சிவலிங்கா என இவர் இயக்கிய அனைத்து படங்களும் அமோக வெற்றி பெற்று வசுலில் புரட்சி செய்தன.

தற்போது மீண்டும் தமிழ் படம் இயக்க ஆயுத்தமாகியுள்ள இயக்குனர் பி.வாசு தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்

Back To Top
CLOSE
CLOSE