Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

போலீஸ் வேடத்தில் தன்ஷிகா நடிக்கும் “ காத்தாடி “

போலீஸ் வேடத்தில் தன்ஷிகா நடிக்கும்

“ காத்தாடி “

கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்கும் படம் “ காத்தாடி “ இந்த படத்தில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகனும், பிரபல நடிகை மகேஸ்வரியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. தாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், சுமார் மூஞ்சி குமார் டேனியல், நான் கடவுள் ராஜேந்திரன், பசங்க சிவகுமார், லொள்ளு சபா மனோகர், வினோதினி, மதுமிதா, சூப்பர் குட் சுப்ரமணி, சேரன்ராஜ். மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பேபி சாதன்யா நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – ஜெமின் ஜோம்அயாநாத்

பாடல்களுக்கு இசை – பவன்

பின்னணி இசை – தீபன்

பாடல்கள் – மோகன்ராஜன்

ஸ்டன்ட் – அன்பறிவ்

கலை – ஜெய்

தயாரிப்பு மேற்பார்வை – அரவிந்த்

தயாரிப்பு – கேலக்ஸி பிக்சர்ஸ் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ். கல்யாண்.இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கத சொல்ல போறோம் படத்தின் இயக்குனர் ஆவார்.

படம் பற்றி இயக்குனர் கல்யாணிடம் கேட்டோம்…

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் காமெடி இரண்டும் கலந்து உருவாக்கி இருக்கிறோம். படத்தின் ஆரம்பம் முதல், இறுதிவரை காமெடி கலாட்டாவாக இருக்கும். தொழிலதிபராக வரும் சம்பத்தின் குழந்தை சாதன்யாவை திருடர்களான அவிஷேக், சுமார் மூஞ்சி குமார் டேனியல் இருவரும் பணத்திற்காக கடத்துகிறார்கள். போலீஸ் ஆபிசராக வரும் தன்ஷிகா திருடர்களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படி காப்பாற்றினார் என்பதை ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம். எனது கத சொல்ல போறோம் படம் வெற்றி பெற்றதற்கு காரணமே அதில் உள்ள செண்டிமெண்ட் காட்சிகள் தான். அது இந்த படத்திலும் காட்சிகளுக் கேற்ப இருக்கிறது. இந்த படமும் நிச்சயமா வெற்றியடையும். கத சொல்ல போறோம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை பார்த்த லிப்பி சினி கிராப்ட்ஸ் வி.என்.ரஞ்சித்குமார் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டியோஸ் கே.சசிகுமாரும் இந்த படத்தை உலகம் முழுதும் வெளியிடுகிறார்கள். ஏலகிரி, கேரளாவில் உள்ள வாகுமன் மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் எஸ்.கல்யாண்.

Back To Top
CLOSE
CLOSE