Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு இசை குடும்பங்கள் சார்பில் நன்றி இசையமைப்பாளர் தேவா…

புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு இசை குடும்பங்கள் சார்பில் நன்றி
இசையமைப்பாளர் தேவா
மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இயல், இசை,நாடகம், நாட்டியம் திரைப்படம் மற்றும் கிராமியக் கலைகள் என பல தரப்பட்ட கலைப் பிரிவுகளை சார்ந்த கலைஞர்களுக்கு மாண்பு மிகு அம்மா அவர்கள், நலிந்த நிலையில் வாழும் புகழ் பெற்ற வயோதிக கலைஞர்களுக்கு மாதம் தோறும் நிதி உதவி வழங்குதல், மறைந்த கலைஞர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு குடும்ப பராமரிப்பு உதவி தொகை வழங்குதல் இளம் கலைஞர்களை வெளி ஊருக்கு அறிமுகம் செய்யும் வண்ணம் அவர்களுக்கு கலைநிகழ்ச்சி வழங்கி ஊக்குவித்தல், புதிய நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடை ஏற்றம் செய்ய நிதி உதவி வழங்குதல். நலிந்த கிராமிய கலைஞர்கள் இசை கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கு நிதி உதவி அளித்தல், கலை மேதைகளின் நினைவினை போற்றும் வகையில், தன்னார்வ கலை நிகழ்சிகளுக்கு நிதி உதவி வழங்குதல், அரும் பெரும் கலை நூல்களை பதிப்பித்து வெளியிட நூற்ப்பதிப்பு மானியம் வழங்குதல், தொன்மை சிறப்புமிக்க கலை அம்சங்களை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் தெருக்கூத்து, இசை நாடகம் பொம்மலாட்டம், தோற்பாவை கூத்து போன்றவற்றை ஆவணப்படமாக்க எண்ணற்ற உதவிகளை செய்துவருகிறார்கள். அத்துடன் நமது பாரம்பரிய கிராமிய கலைகளையும், கலைஞர்களையும் வெளி நாடுகளிலும் புகழ் பெரும் வண்ணம் நிதியுதவி வழங்கி கௌரவித்து வருகிறார்.
அவ்வகையில் தான் திரைப்பட இசையமைப்பாளர் திரு.கோவர்தன் மாஸ்டர் அவர்களுடைய வறுமை நிலையினை மனதிற்க் கொண்டு தாயுள்ளத்தோடு, வாழும் தெய்வம் மாண்பு மிகு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் வாயிலாக மாண்பு மிகு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இசை குடும்பத்தினர் மீது எந்த அளவிற்கு கருணையும், பற்றுதலும் கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. கடவுள் மனித ரூபத்தில் வந்து பக்தர்களுக்கு உதவிகளை செய்வார் என்று கூறுவார்கள். அது போன்று மாண்பு மிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் திரு.கோவர்தன் மாஸ்டர் அவர்களுக்கு இந்த பேருதவி செய்ததற்கு ஒட்டுமொத்த இசைக் குடும்பங்களின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை மாண்புமிகு முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
தேவா

Back To Top
CLOSE
CLOSE