Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ராமகிருஷ்ணன் – சொந்தர்ராஜன் நடிக்கும் “ ஒரு கனவு போல “ V.C.விஜயசங்கர் இயக்குகிறார்..

ராமகிருஷ்ணன் – சொந்தர்ராஜன் நடிக்கும்

“ ஒரு கனவு போல “

V.C.விஜயசங்கர் இயக்குகிறார்

இறைவன் சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாகC.செல்வகுமார் தயாரிக்கும் படம் “ ஒரு கனவு போல “ இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சொந்தர்ராஜன் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். மற்றும் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, சுப்ரமணி, கவி பெரியதம்பி, வின்னர் ராமசந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோர் நடிக்கிறார்கள். கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுபால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – அழகப்பன்.N இவர் மலையாளத்தில் 60 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர். அதில் 40 படங்களின் மூலம் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார்.

புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன் பாடல்களுக்கு E.S.ராம் இசையமைக்கிறார்.

கலை – M.D.பிரபாகரன்

எடிட்டிங் – சாபு ஜோசப்

ஸ்டன்ட் – தியாகராஜன்

நடனம் – எஸ்.எல்.பாலாஜி ஆடியோகிராபி – ஜி.தரணிபதி

தயாரிப்பு மேற்பார்வை – எம்.செந்தில்

தயாரிப்பு – C.செல்வகுமார்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – V.C.விஜயசங்கர்

இவர் பாரதிகண்ணம்மா, அழகி, மறுமலர்ச்சி, ஆட்டோகிராப், சந்தோஷ்சுப்பிரமணியம், 23 ம் புலிகேசி, பாண்டவர் பூமி, உட்பட ஏராளமான வெற்றிப் படங்களின் இணை இயக்குனர். இவர் இயக்கும் முதல் படம் இது. இவர் சில படங்களில் வசனம் எழுதியதோடு, பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

லாரி டிரைவராக இருக்கும் ராமகிருஷ்ணனுக்கும், சினிமாவில் பாடகர் ஆக வேண்டும் என்று லட்சியத்துடன் வாழும் சொந்தர்ராஜனுக்கும் உள்ள நட்பின் வலிமையை சொல்லும் படம் இது. வாழ்கையே ஒரு கனவு போல – ஆனால் அதில் நாம் வாழ்ந்தே தீர வேண்டும் ஒரு கவிதை போல என்கிற உயரிய, யதார்த்த கருத்தை பதிவு செய்யும் படம் இது. கணவன், மனைவி உறவின் உன்னதங்களை, உள்ளுக்குள் இருக்கும் நற்பண்புகளைச் சொல்லும் படம் இது. இந்த கதை எல்லோரது வாழ்க்கையிலும் நடந்த கதை ! ஆனால் அதை யாரும் வெளியில் சொல்லாத கதை !

படப்பிடிப்பு நாகர்கோவில், கன்னியாகுமரி, ஹைதராபாத், கொடைக்கானல், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர்.

Back To Top
CLOSE
CLOSE