Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இந்த படத்திற்கு பிறகு தயாரிப்பு துறையில் ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் பெயர் மேலோங்கும்..

ஒரு படத்தை உருவாக்குவதற்கும், தயாரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது” என்கிறார் ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் நிறுவுனர் டில்லி பாபு

தயாரிப்பு துறையில் பாபி சிம்ஹாவின் உறுமீன் திரைப்படம் மூலம் கால் பதித்து, தற்போது தரம் வாய்ந்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கும் இளம் தயாரிப்பாளர்களுள் ஒருவர் ‘ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் நிறுவுனர்’ டில்லி பாபு. ஏற்கனவே இவர் தயாரிப்பில் உருவாகும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பராக நடந்து கொண்டிருக்க, தற்போது ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியானது முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமாருடன் கைக் கோர்த்திருக்கிறது.

“இன்றளவும் எனக்கு மிகவும் பிடித்தமான படமாக வலம் வந்து கொண்டிருப்பது, ராம் குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி திரைப்படம் தான். தற்போது நாங்கள் இருவரும் இணைந்திருக்கும் இந்த திரைப்படமானது, எங்கள் இருவரின் சினிமா வாழ்க்கையிலும் ஒரு சிறந்த மைல் கல்லாக அமையும் என்பதை உறுதியாக நம்புகிறேன். அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு பிறகு தயாரிப்பு துறையில் ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் பெயர் மேலோங்கும். இந்த படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்களை தற்போது தேர்வு செய்து வருகிறோம். சிறப்பாக வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இளம் கதாநாயகன் ஒருவர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கும் இந்த அதிரடி திரைப்படமானது, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எல்லா விதத்திலும் பூர்த்தி செய்யும்..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஆக்ஸஸ் பிலிம் பாக்டரியின் நிறுவுனர் டில்லி பாபு.

Back To Top
CLOSE
CLOSE