Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நான்கு கதைக்களமாக “ நமது “ மோகன்லால் – கவுதமி நடிக்கிறார்கள்..

நான்கு கதைக்களமாக
“ நமது “
மோகன்லால் – கவுதமி
மோகன்லால் – கவுதமி ஜோடி சேர்ந்து நடிக்க மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு படம் தயாராகிறது. தெலுங்கில் அந்தப் படத்திற்கு “ மனமன்தா “ என்றும் தமிழில் “ நமது “ என்றும் பெயர் சூட்டி உள்ளார்கள்.
சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.
மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் ஜோடி சேர்ந்த மோகன்லால் – கவுதமி ராசியான ஜோடி என்று கேரளாவில் போற்றப் படுவதுண்டு. மற்றும் விஸ்வநாத் – ஹனிஷா ஆம்ரோஷ் இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள். மற்றும் நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடிமாருதிராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
வசனம் மற்றும் பாடல்களை மதன்கார்க்கி எழுதுகிறார்.
ஒளிப்பதிவு – ராகுல் ஸ்ரீவத்சவ்
இசை – மகேஷ் சங்கர்
தயாரிப்பு – ரஜினி கோரப்பட்டி
எழுதி இயக்குபவர் சந்திரசேகர் ஏலட்டி. இவர் தெலுங்கில் கோபிசந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கி இருப்பவர்
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.
ஒரு உலகம்-நான்கு கதை என்கிற தத்துவத்தை இதில் கையாள்கிறோம். சூப்பர் மார்க்கெட்டில் உதவி மேலாளராக வேலை செய்யும் மோகன்லால்
குடும்பத் தலைவியாக கவுதமி
11 வயது சிறுமியாக ரெய்னாராவ்
24 வயது வாலிபனாக விஷ்வாந்த்
இப்படி நால்வரைப்பற்றிய நான்கு கதைகள். இந்த நால்வரும் தனித்தனி கதாபாத்திரங்கள் – யாரும் யாருக்கும் அறிமுகமோ – உறவு முறையோ இல்லை.
நான்கு பேரின் கதைகளும் ஓன்று சேரும் இடம் தான் படத்தின் கிளைமாக்ஸாக இருக்கும்.
அருமையான குடும்பக் கதையாக ‘நமது’ உருவாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது என்றார் இயக்குனர்.

Back To Top
CLOSE
CLOSE