Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 – II’ படத்தின் டீசர் .

ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 – II’ படத்தின் டீசர்

நட்பு, காதல், சந்தோஷம், சென்னை இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டு மீது வைத்திருக்கும் இணைப்பிரியா அன்பு என பல சுவாரசியங்களை ரசிகர்களுக்கு வழங்கிய திரைப்படம், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான சென்னை – 28. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘சென்னை 28 – II’ திரைப்படத்தின் டீசரானது, சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

“இயக்குனர் வெங்கட் பிரபு என்றாலே, பிற மொழி திரைப்படத்தின் கதைகளை உல்ட்டா பண்ணுபவர் தான்…இந்த படமும் ஹாலிவுட் படமான ‘ஹாங் ஓவர்’ போல தான் இருக்கும்” என்று ‘மிர்ச்சி’ சிவா சீரியஸாக பேச, “சிவா சார்! உங்க பேங்க்ல வெங்கட் பிரபு பணம் போட்டுட்டாராம்!” என்று ஒருத்தர் சொல்ல, அடுத்த கணமே பேச்சை மாற்றுகிறார் ‘மிர்ச்சி’ சிவா: “வெங்கட் பிரபு படங்கள் அனைத்துமே தனித்துவமான கதை களங்களை கொண்டது தான். இந்த படமே அதற்கே ஒரு சிறந்த உதாரணம்…” என்று கூறும் தருணங்கள் யாவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது . 65 வினாடிகள் ஓடக்கூடிய இந்த ‘சென்னை 28 – II’ படத்தின் டீசர் மூலம் மிகச் சரியான சிக்ஸரை அடித்துள்ளார் வெங்கட் பிரபு என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

Back To Top
CLOSE
CLOSE