Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ராஜ்கமல் ஜோடியாக பிரான்ஸ் புதுமுகம் ஆண்ட்ரீயன் நடிக்கும் “ மேல் நாட்டு மருமகன் “

ராஜ்கமல் ஜோடியாக பிரான்ஸ் புதுமுகம் ஆண்ட்ரீயன் நடிக்கும்

“ மேல் நாட்டு மருமகன் “

எம்.எஸ்.எஸ் இயக்குகிறார்

உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் “ மேல் நாட்டு மருமகன் “ இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.கெளதம் கிருஷ்ணா

இசை – வே.கிஷோர் குமார்

படத்தொகுப்பு – விஜய் கீர்த்தி ( இவர் பிரபல எடிட்டர் ராஜ்கீர்த்தியின் மகன் ஆவார்) கலை – ராம் / நடனம் – சங்கர்

பாடல்கள் – நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ்.

தயாரிப்பு நிர்வாகம் – ஆனந்த்

தயாரிப்பு – மனோ உதயகுமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.எஸ்.எஸ்

படம் பற்றி இயக்குனர் எம்.எஸ்.எஸ்.கூறியதாவது…

பணம், புகழ், காதல் என்று ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு ஆசை. இந்த படத்தின் நாயகனின் ஆசையே.. ஒரு அயல்நாட்டு பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டு மேல்நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார். பணம் சம்பாதிப்பதாக இருந்தால் பரவாயில்லை எந்த நாட்டிலும் சம்பாதித்து விடலாம். ஆனால் திருமணம் என்று வரும்போது பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் நமது நாட்டை விட வேறு நாடு கிடையாது. அப்படி இருக்க நாயகனின் லட்சியம் நிறைவேறுமா ? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படப்பிடிப்பு தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர்.

Back To Top
CLOSE
CLOSE