Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

கிரிக்கெட் அணிக்கு பாடல் இசை அமைத்து விளம்பர தூதராக வரும் ஜி வி பிரகாஷ்.

கிரிக்கெட் அணிக்கு பாடல் இசை அமைத்து விளம்பர தூதராக வரும் ஜி வி பிரகாஷ்.

பிரபல இசை அமைப்பாளரும் , நடிகருமான ஜி வி பிரகாஷுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது அபரிதமான அன்பு இருப்பதை அனைவரும் அறிவர்.தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி என் பி எல் கிரிக்கெட் போட்டியில் TuTi Patriotsஅணியை ஊக்கு விக்கும் விதமாக ஒரு தீம் பாடல் ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி உள்ளது. அவரே இந்த அணியின் விளம்பர தூதுவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘கிரிக்கெட்டும் இசையும் என் வாழ்வில் இன்றி அமையாத ஒன்று. கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள ஒரு தனி நபராக தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் எடுத்து வரும் இந்த முயற்சிக்கு என் பாராட்டுகள். TUTI Patriots அணிக்கு என் பாடல் புத்துணர்ச்சி தந்து சாதனைகள் புரிய உதவும் என நம்புகிறேன் என்றார் ஜி வி பிரகாஷ்.

‘ஜி வி பிரகாஷுடன் இணைந்து இருப்பது எங்கள் அணிக்கு மிக மிக பெருமை.’ நம்ம பயலுவ ‘ என்ற அடை மொழி எங்கள் அணிக்கு உரித்தாகும்.அந்த அடை மொழியின் அடிப்படையில் உருவாகும் இந்த ஆல்பம் ரசிகர்களை நிச்சயம் கவரும். இந்த மாதம் 12 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் இந்த ஆல்பம் வெளி வரும்’ என்கிறார் ஆல்பர்ட் திரை அரங்கின் உரிமையாளரும் ,TUTI Patriots அணியின் உரிமையாளருமான முரளிதரன்.

Back To Top
CLOSE
CLOSE