Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

கதையின் நாயகன் அப்புக்குட்டியிடம் இந்த படத்தின் கதையைக்கூற மிகவும் பிடித்துவிட்டதாக கூறினார். “காகித கப்பல்”

EVERGREEN MOVIE INTERNATIONAL
V.A.DURAI வழங்கும்
“காகித கப்பல்”

9 வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன், நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பை குறிக்கோளாக வைத்து வாழ்பவன் கதையின் நாயகன். படித்த பெண்மணி இந்த கதையின் நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்ப்பந்தத்தின் காரணத்தினால் இருவரும் மணம் முடிக்கின்றனர். படிக்காதவன் படித்தவளாக இருந்தும் தரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். கதாநாயகியின் ஒரே ஒரு ஆசையால் அவர்களது வாழ்க்கை “காகித கப்பல்” ஆனது.

மறந்தேன் மெய் மறந்தேன், சொல்லித்தரவா, அன்பா அழகா ஆகிய படங்களை இயக்கிய S.சிவராமன் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் V.A.துரை கூறுகையில் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக இருக்கும் இயக்குனர் S.சிவராமன் அவர்களை எனக்கு பல வருங்களாக தெரியுமென்றும், மூன்று படங்களை இயக்கிய இவர் தன்னிடமும் கதையின் நாயகன் அப்புக்குட்டியிடம் இந்த படத்தின் கதையைக்கூற மிகவும் பிடித்துவிட்டதாக கூறினார். என்னமா கண்ணு, பிதாமகன், கஜேந்திரா போன்ற பெரிய படங்களை இதுவரை தயாரித்து வந்த தங்களுக்கு சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை தரமாக இயக்கிய S.சிவராமன் கண்டு பிரம்மிப்பதாக கூறினார். மேலும் இப்படம் எளிய மக்களின் வாழ்க்கையை உணர்வு பூர்வமாக படம்பிடித்து காட்டும் என்று கூறினார்.

இசையமைப்பாளர் நிஜாம் இசையில் “வித்தைக்காரி ஜெகஜால வித்தைக்காரி”, “ஆகாய கடலிலே காகித கப்பல்” ஆகிய இரண்டு பாடல்களை கவிஞர் கலைக்குமார் எழுதியுள்ளார். இப்படத்தில் “தல” அஜீத் அவர்களின் பெருமையை அப்புக்குட்டி பாடுவது போல் “அம்மா அப்பா குடும்பத்தை பாரு” என்ற பாடலை கவிஞர் விவேகா எழுத சாண்டி ஆடியுள்ளார்.

நடிகர்கள்

கதையின் நாயகனாக : சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டி

கதாநாயகி : டில்லிஜா ( அறிமுகம்)

M.S. பாஸ்கர்

“பவர் ஸ்டார் “ DR.சீனிவாசன்

மற்றும் பலர்….

தொழில்நுட்ப கலைஞர்கள்:

கதை ,திரைக்கதை எழுதி இயக்குபவர் S.சிவராமன்

தயாரிப்பாளர் : V.A.துரை

தயாரிப்பு நிறுவனம்: எவர்க்ரீன் மூவி இன்டர்நேஷனல்

இசை : நிஜாம்

ஒளிப்பதிவு : வெங்கி தர்ஷன்

படத்தொகுப்பு : யாசின்

பாடல்கள்: கவிஞர் கலைக்குமார், கவிஞர் விவேகா

கலை இயக்குனர் : சாய் குமார்

மக்கள் தொடர்பு – நிகில்

நடனம் – சாண்டி

Back To Top
CLOSE
CLOSE