Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

பேட்லர்ஸ் சினிமா தயாராயிருக்கும் நான்கடவுள் ராஜேந்திரன் நடிக்கும் “யானை மேல் குதிரை சவாரி”

பேட்லர்ஸ் சினிமா தயாராயிருக்கும்

நான்கடவுள் ராஜேந்திரன் நடிக்கும்

“யானை மேல் குதிரை சவாரி”

ஒரு காரியத்தை செய்ய முயற்சி செய்யாமலே முடியாதுன்னு முடிவு பன்றதுதான் உலகத்துலையே நம்பர் ஒன் முட்டாள்தனம்ங்கிறத மனசுல வச்சிக்கிட்டு ஒரு டீம் தங்களால முடியாத காரியத்தை முடிக்க முயற்சி பன்றாங்க. இத காமேடி, சென்ட்டிமென்ட் கலந்து பண்ணிருக்கோம். நான் கடவுள் ராஜேந்திரன் செம்ம ஜாலியான கேரக்டர்ல நடிச்சிருக்கார்.
அர்ச்சனாசிங், லொள்ளுசபா சாமிநாதன், வழக்குஎண் முத்துராமன் கிருஷ்ணமூர்த்தி, மிப்பு, தாரிகா நடிச்சிருக்காங்க. பிண்ணனி இசை தாஜ்நூர், ஒளிப்பதிவு மோகன், எடிட்டிங் கணேஷ்குமார், நடனம் பாபிஆண்டனி. இணை தயாரிப்பு : ரேகா கணேஷ், ஆர்.எஸ். பிரேமலதா. எழுத்து, பாடல்கள், தயாரிப்பு இயக்கம் – கருப்பையா முருகன்.

அரக்கோணம் அருகே நடந்த ;யானைமேல் குதிரைசவாரி’ படத்தின் படப்பிடிப்பில் நான்கடவுள் ராஜேந்திரன், லொள்ளுசபா சாமிநாதன், நாயகி அர்ச்சனாசிங் நடித்துக்கொண்டிருந்தபோது, நிறைய பொதுமக்கள் கூடி படப்பிடிப்பை வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல், இளைஞர்கள் ராஜேந்திரனை பார்த்து ‘தலைவா’ ‘சிங்கம் சகாயம்’ என்று கத்தி அதகளபடுத்தியதோடு விடாமல் ‘உங்க சிக்ஸ்பேக்க காமிங்க’ என்று வேண்டுகோள் வைக்க, ராஜேந்திரனும் சட்டையை கழட்டி சிக்ஸ்பேக்கை காட்டி மிரட்டினார். இதைக்கண்டு ரசிகர்கள் மிரண்டுபோனார்.

‘யானை மேல் குதிரை சவாரி’ படத்தின் டைட்டிலில் ‘யானை மேல் குதிரை சவாரி, போயி பாரு தெரியும் உன் சேதி’ என்று தொடங்கும் பாடலின் இடையே ‘ஈழத்தமிழனை காக்கப்போறிங்களா?’ என்ற ஒரு வரி வருகிறது. இதில் ‘ஈழம்’ என்ற வார்த்தையை எடுத்தே ஆகவேண்டும் என்று சென்சார் போர்டு அதிகாரி சொல்ல, பாடலாசிரியரும், இயக்கனருமான கருப்பையா முருகன் எவ்வளவோ போராடியும் அந்த வார்த்தையை பாடலில் வைக்க அனுமதி தர மறுத்து விட்டார்கள். வேறு வழியின்றி, வேதனையோடு அந்த வார்த்தையை கட்செய்தார் இயக்குனர்.

Back To Top
CLOSE
CLOSE