Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

குழந்தைகளின் கல்விக்காக உதவி கரம் நீட்டும் நடிகர் விஷால் !!

குழந்தைகளின் கல்விக்காக உதவி கரம் நீட்டும் நடிகர் விஷால் !!

சில மாதங்களுக்கு முன்பு மத்திய கைலாஷ் அருகே அதிகாலையில் குடித்துவிட்டு போதையில் விலை உயர்ந்த ஆடி காரை ஒட்டி வந்த ஒரு பெண்ணின் கார் மோதி உயிர் இழந்தார் தரமணியை சேர்ந்த கார்பென்டர் முனுசாமி ( 53). அவருடைய மனைவி கோவிந்தம்மாள் , மகன் ஆனந்த் 11 ஆம் வகுப்பு , மகள் திவ்யா 7ஆம் வகுப்பு இவர்கள் இருவரும் திருவான்மியூரில் உள்ள கார்ப்ரேஷன் பள்ளியில் படித்து வருகின்றனர். துன்பத்தில் வாடி வந்த இக்குடும்பத்தின் நிலை அறிந்த விஷால் அன்னாரின் குழந்தைகளான ஆனந்த் மற்றும் திவ்யா ஆகியோரின் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பள்ளி முதல் முதல் கல்லூரி வரை அவர்கள் விரும்பி படிக்க ஆசைப்படும் படிப்புக்கான செலவை விஷால் தேவி அறக்கட்டளையின் மூலம் செய்யவிருக்கிறார். விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “ கத்தி சண்டை “. இப்படத்தின் படபிடிப்பில் போட்டோ பிளேட் செல்வம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். வறுமையில் வாடி வந்த அக்குடும்பத்தை பற்றிய தகவல் அறிந்த விஷால் அன்னாரின் மகன்கள் ஆகாஷ் 6 ஆம் வகுப்பு , சந்தோஷ் 3 ஆம் வகுப்பு ஆகியோர் பள்ளியில் இருந்து கல்லூரி வரை படிக்க விரும்பும் படிப்புக்கான செலவை விஷால் தேவி அறக்கட்டளையின் மூலம் செய்யவிருக்கிறார்.

Back To Top
CLOSE
CLOSE