Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்…

சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது
நம்மளுடைய கலாச்சாரத்தை பிரதி பலிக்காத இந்த மாதிரியான மாற்று மொழி தொடர்கள் வருவது எந்த விதத்திலும் நல்லதல்ல… நானும் சின்னத்திரையில் இருந்துதான் வந்திருந்தவந்தான். அதனால் என்னுடைய ஆதரவு என்றைக்கும் சின்னத்திரைக்கு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கமும் சின்ன திரை கலைஞர்களுக்கு என்றும் அதரவு அளிக்கும் என்றார்..

சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் பெப்சி தலைவர் G.சிவா பேசியது
பெப்சி -யின் ஆதரவும் சின்ன திரை கலைஞர்களுக்கு இருக்கும் என்றார்.

சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் நடிகை ராதிகா பேசியது :-
இது ஒரு முக்கியமான விஷயமாகும்.. ஹிந்திகாரங்க கதை எழுதுவது போல் நாமும் எழுதலாமே என்று கேட்டதற்கு. ஹிந்திகாரங்க என்ன கதை எழுதினாலும் மக்கள் பார்க்கலாம் , ஹிந்திகார பெண்கள் என்ன உடை அணிதாலும் பார்க்கலாம். ஆனால் நம் பெண்கள் அப்படி உடை அணிய கூடாது என்ற ஒரு விவாதத்தை வைத்தார்கள் எனக்கு இது தமாஷாக இருந்தது. இதை போன்றதொரு விஷயம் மேலும் வளர கூடாது. தவறை தட்டி கேட்பது என்பது வேறு. இவ்வளவு பேர் உள்ளோம் நிச்சயம் இதை தடுக்க குரல் கொடுப்போம். நீங்கள் இதை இதோடு நிறுத்த வேண்டாம்.மிகப்பெரிய அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம் , பெப்சி போன்ற அமைப்புகள் உங்களோடு உள்ளது. நீங்கள் அனைவரும் இதை முதல் படியாக எடுத்து கொண்டு இன்னும் ஒவ்வொரு படியாக சென்று நீங்கள் போராட வேண்டும்.கர்நாடகாவில் ஒரு டப்பிங் படமோ அல்லது தொலைக்காட்சி தொடரோ வெளியாவது கடினம். அந்த கட்டுப்பாடு என்பது நம்மிடம் இல்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தான். அதற்காக வீடு சொத்து என எல்லாவற்றையும் எழுதி கொடுக்க சொன்னால் அது சரிபட்டு வராது. இது வெறும் முதல் படி. மாண்புமிகு புரட்சி தலைவி முதலமைச்சர் அவர்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. உங்களின் சார்பாக இரண்டு முறை நான் அவரிடம் இதை பற்றி பேசியுள்ளேன். கண்டிப்பாக அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம். நாங்கள் இதை பற்றி பல முறை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கூறிவிட்டோம். மாற்று மொழி தொடர்களை எல்லா தொலைக்காட்சியிலும் “ prime Time “ –ல் ஒளிபரப்பு செய்கிறார்கள். தொடரில் நடிக்கும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழில் உருவாகும் தொடர்களை Prime Time ல் ஒளிபரப்ப வேண்டும் சின்ன திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நீங்கள் என்ன போராட்டம் நடத்தினாலும் நான் அங்கு வருவேன். உங்களுக்காக குரல் கொடுப்பேன். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறினார்.
உண்ணா விரதத்தில் நடிகை குஷ்பூ கலந்து கொண்டு அவருடைய ஆதரவையும் தெரிவித்தார்

​தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதத்தை மாலை 5 மணி அளவில் கலந்து கொண்ட அனைவரும் பழச்சாரை அருந்தி நிறைவு செய்தனர்​

Back To Top
CLOSE
CLOSE