Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது ‘உள்குத்து’ படத்தின் “பெசையும் எசையா” பாடல் .

ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது ‘உள்குத்து’ படத்தின் “பெசையும் எசையா…’ பாடல்

துரோகம், வஞ்சகம், சண்டை, சூழ்ச்சி ஆகிய குணங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ‘உள்குத்து’ என்ற சொல்லும் கண்டிப்பாக பயணிக்கும். அத்தகைய சொல்லை மையமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம் தான், இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில், ‘அட்டக்கத்தி’ தினேஷ் மற்றும் நந்திதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் ‘உள்குத்து’ திரைப்படம். மக்களின் ரசனைகளை நன்கு அறிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு இருக்கும் படங்களை மட்டுமே தயாரிக்கும் கெனன்யா பிலிம்ஸ் இந்த உள்குத்து படத்தை தயாரித்து வருவது மேலும் சிறப்பு. திருடன் போலீஸ் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், உள்குத்து படத்தின் தயாரிப்பாளருமான ஜெ செல்வக்குமார், இயக்குனர் கார்த்திக் ராஜு மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் மீண்டும் இந்த உள்குத்து படத்திற்காக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி, நகைச்சுவை, செண்டிமெண்ட் என பல சிறப்பம்சங்களை கலவையாக உள்ளடக்கி இருக்கிறது உள்குத்து திரைப்படம். இந்த உள்குத்து படத்தின் “பெசையும் எசையா…’ என்னும் பாடலை வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கின்றனர் படக்குழுவினர்.

“இந்த உலகத்தில் எப்போதும் முடிவில்லாமல் இருப்பது காதல் ஒன்று மட்டும் தான். அந்த காதலை மிக அழகாக தன்னுடைய மெல்லிசையால் இந்த “பெசையும் எசையா…’ பாடல் மூலம் சொல்லியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். மிக எதார்த்தமான பாடல் வரிகளை கொண்டு இந்த பாடலை எழுதி இருக்கிறார் கவிஞர் விவேக் வேல்முருகன். வந்தனா ஸ்ரீனிவாசனின் நெஞ்சை வருடும் குரலில் உருவாகி இருக்கும் இந்த “பெசையும் எசையா…’ பாடல் கண்டிப்பாக ஒவ்வொரு ரசிகர்களின் உள்ளத்திலும் பதியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. காதலுக்கு புத்துயிர் கொடுக்கும் விதத்தில் எங்களின் “பெசையும் எசையா…’ பாடல் இருக்கும்…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் உள்குத்து படத்தின் இயக்குனர் கார்த்திக் ராஜு

Back To Top
CLOSE
CLOSE