Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தர்மதுரை படம் பார்த்து நெகிழ்ந்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தர்மதுரை படம் பார்த்து நெகிழ்ந்தனர்.

இயக்குநர் சீனுராமசாமிக்கு பாராட்டு

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஸ்டுடியோ 9 சுரேஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமிசாமியின் இயக்கத்தில் வெளிவரும் தர்மதுரை படத்தின் பிரத்யேக காட்சியை கண்டுகளித்து பாராட்டினர்.

தன் மருத்துவ குடும்பத்துடன் படம் பார்த்த பா.மா.கா தலைவர் நெகிழ்ந்து மனதார பாராட்டி பேட்டியும் தந்துருக்கிறார்கள்.

மருத்துவர்கள் படம் என்பதால் அதுவும் பா.மா.கா தலைவரின் இப்பேட்டியால் இது முக்கியத்தும் வாய்ந்த நிகழ்வாக பார்க்கிறது தர்மதுரை படக்குழு.

“நல்ல கதை, நன்றாக இயக்கியுள்ள படம். தனியார் மற்றும் அரசு கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் தர்மதுரை” என்று மருத்துவர் ராமதாஸ் தர்மதுரை படத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார். “நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தை தர்மதுரை தருகிறது” என்று கூறியுள்ளார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் “ஒரு குடும்பத்தின் உணர்ச்சி மோதல்களை மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் சீனு ராமசாமி” என்று தர்மதுரை படத்தை புகழ்ந்தார். தர்மதுரை படத்தில் சமூக நல்லிணக்கம், திருநங்கை மறுவாழ்வு, காதல் ஆகியவற்றை அழகாக சித்தரிக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி என்றார்.

Back To Top
CLOSE
CLOSE