Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

ஆதரவற்ற குழந்தைகளுக்கு ‘கபாலி’ படத்தை திரையிட்டனர் தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களின் சார்பில் விளையாட இருக்கும் ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி .

ஆதரவற்ற குழந்தைகளுக்கு ‘கபாலி’ படத்தை திரையிட்டனர் தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களின் சார்பில் விளையாட இருக்கும் ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி

ஒரு புறம் உலகமே கபாலி படத்தின் வெற்றியை கொண்டாடி கொண்டு இருக்க, மறுபுறம் அந்த கபாலி படத்தை பார்க்க வசதியில்லாமல் பல ஆதரவற்ற குழந்தைகள் ஏங்கி கொண்டு இருக்கின்றனர். அந்த ஆதரவற்றோர்களை மனதில் கொண்டு, அவர்களுக்காக கபாலி படத்தின் ஒரு சிறப்பு காட்சியை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிட்டார் ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ முரளிதரன். ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் இணை உரிமையாளர் டாக்டர் ரவீந்திரன், அனுகிரகா தன்வந்ரி மெடிக்கல் – கல்வி – ஆராய்ச்சி மையத்தின் தளமிங் நிர்வாகி திருமதி சுயம்பு கனி மற்றும் ரவுண்டு டேபிள் தொண்டு நிறுவனத்தின் வினய் கிராந்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்தினர். வருகின்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களின் சார்பில் விளையாட இருக்கும் ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் அனைத்து வீரர்களும் இந்த சிறப்பு காட்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

“ஆதரவற்ற பிள்ளைகளுக்கு கபாலி படத்தை திரையிட்டது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை 5 – 7 வயது குழந்தைகள் அனைவரும் ரஜினிகாந்தை கொண்டாடிய விதத்தை பார்த்து நான் கண் கலங்கி நின்றேன்…இந்த தருணத்தை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது…வெறும் விளையாட்டு மட்டுமில்லாமல் சமூதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக எங்களது ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி விளங்கும்…” என்று கூறினார் ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் இணை உரிமையாளர் டாக்டர் ரவீந்திரன் குமரன்.

Back To Top
CLOSE
CLOSE