Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

அதிரடி ஆக்ஷன் படம் “போங்கு ” நட்ராஜ் சுப்ரமணியன் ( நட்டி) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அதிரடி ஆக்ஷன் படம்
“போங்கு ”
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும் இணைத்து தயாரிக்கும் படம் “ போங்கு “ சதுரங்க வேட்டை வெற்றி படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன் ( நட்டி ) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். மற்றும் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், மனிஷா, பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – ஸ்ரீகாந்த் தேவா / பாடல்கள் – கபிலன், தாமரை, மதன்கார்க்கி
எடிட்டிங் – கோபிகிருஷ்ணா / கலை – ராஜமோகன்
ஸ்டன்ட் – சுப்ரீம் சுந்தர் / நடனம் – கல்யாண் , பாப்பி
தயாரிப்பு மேற்பார்வை – ஏ.பி.ரவி
தயாரிப்பு – ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தாஜ். இவர் பிரபல கலை இயக்குனர் சாபுசிரில் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனர் தாஜ் கூறியதாவது…
எந்த ஒரு குற்றமும் புதிதாக உருவாகிறது இல்லை. எல்லா குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்தந்த காலகட்டத்திற்கேற்ப மாதிரி நவீனமாக்கப் பட்டு குற்றம் நடந்து கொண்டிருக்கிறது.
குற்றங்களுக்கான ஆனிவேர் எது ? யார் என்று பார்த்தல் வெளியிலிருந்து யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள். உள்ளேயே இருந்து கொண்டு வெளியாட்களை கொண்டு அந்த குற்றத்தை நிகழ்த்தி இருப்பார்கள்.
அப்படித்தான் ரோல்ஸ் ராய்ஸ் காரின் திருட்டும். யார் ? யாரால் ? எப்படி திருடப் படுகிறது என்பது பரபரப்பான திரைக்கதையாக இருக்கும்.
காஸ்ட் லியான கார் பற்றிய கதையை காஸ்ட்லி செலவு செய்து படமாக்கி இருக்கிறோம். ஒரு புதிய இயக்குனருக்கு இவ்வளவு செலவு செய்து படமாக்க ஒத்துக் கொண்ட தாயாரிப் பாளர்களுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டுளேன் என்றார் இயக்குனர் தாஜ்.

Back To Top
CLOSE
CLOSE