‘கவலை வேண்டாம்’ படத்தின் டீசரை இன்று மாலை வெளியிடுகிறார் நடிகர் தனுஷ்
கவலை இல்லாமல் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் முக்கியமான கொள்கையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட வாழக்கையை வாழ்வதற்கு தேவையான காதலையும், உறவுகளையும் மையமாக கொண்டு உருவான படங்கள் தமிழ் சினிமாவில் குறைவு என்றாலும், அந்த படங்கள் யாவும் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த படங்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தற்போது அந்த வரிசையில் இணைய தயாராக இருக்கிறது ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, ‘யாமிருக்க பயமே’ இயக்குனர் டீகே இயக்கி இருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம். ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தின் டீசரை இன்று மாலை ஆறு மணியளவில், நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்.
“கவலை வேண்டாம் படத்தின் டீசரை வெளியிடுவதற்கு ஒப்புக்கொண்ட தனுஷிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். ஒரு கதாப்பாத்திரமானது எப்படி இருக்க வேண்டும் என்பதை திரையில் மிக அழகாக பிரதிபலித்து, தமிழ், ஹிந்தி என ஒட்டுமொத்த இளம் ரசிகர்களின் நெஞ்சங்களிலும் நீங்கா இடத்தை பிடித்திருப்பவர் தனுஷ். இளம் ரசிகர்களை தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் தன் வசம் வைத்திருக்கும் தனுஷ் தான் எங்களது ‘கவலை வேண்டாம்’ டீசரின் விளம்பர தூதராக இருக்க வேண்டும் என நாங்கள் கண்ட கனவு, தற்போது நிஜமாகி இருக்கிறது. முழுக்க முழுக்க இள வட்டாரங்களுக்காக, இளம் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் எங்கள் ‘கவலை வேண்டாம்’ படத்தின் டீசரை தனுஷ் வெளியிடுவது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது….”என்று கூறுகிறார் ‘கவலை வேண்டாம்’ படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.