Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப்பெற்ற திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா கூறியதாவது…

தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப்பெற்ற திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா கூறியதாவது…

என் சொந்த ஊர் சிவகாசி,நான் திருநங்கை என்று தெரிந்ததும் என்னுடைய 13 ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன்.

கோயம்பேட்டில் டீ கடையில் வேலை பார்த்தேன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நிறைய சினிமா கம்பெனிகளில் வாயப்புக்காக ஏறி இறங்கினேன். சில சினிமா கம்பெனிகளில் உள்ளே நுழைய கூட அனுமதிக்கவில்லை. சில கம்பெனிகளில் போட்டோ கேட்பார்கள். எப்படி போட்டோ கொடுப்பது என தெரியாமல் பாஸ்போட் போட்டோக்களை கொடுத்து இருக்கிறேன்.

வடபழநியில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை பாரத்துக்கொண்டே நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் புதியபூமி எனும் நடனப்பள்ளியில் நடனம் கற்றுகொண்டேன். நடனம் என் சிறுவயது கனவு. பின்பு நிறைய இடங்களில் மேடை நடன கலைஞராக என் வாழ்க்கை ஆரம்பமானது. அந்த சமயங்களில் நிறைய பேரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானேன்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஒப்பனை கலைஞராக பிரபல நடிகைகள் அனுஷ்கா, ஸ்ரேயா, விசாலினி ஆகியோரிடம் பணிபுரிந்தேன். அப்பொழுது தர்மதுரை படத்திற்கு விசாலினி அவர்களுக்கு ஒப்பனைகலைஞராக பணியாற்ற சென்றிருந்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை, இயக்குனர் திரு.சீனுராமசாமி அவர்கள் என்னை அழைத்து நடிக்க வைத்தார்.

என் அண்ணணாகவே மாறி திரு.விஜய்சேதுபதி அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார். இன்று படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த தீபாவளி வந்தால் என் பெற்றோர்களை பிரிந்து 10 வருடங்கள் ஆகிறது. ஊரில் படம் பார்த்துவிட்டு என் பெற்றோர்,அண்ணன் ஆகியோர் என்னை அழைத்து பேசினர்..எனக்கு கண்ணீர் வந்து விட்டது.

இந்த படத்தில் நடித்ததின் மூலம் பிரிந்து இருந்த என் குடும்பத்தினருடன் நான் சேர்ந்துவிட்டேன். மேலும் மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் தீவிரமாய் நடித்து வருகிறேன். என்னை திரையுலகில் அறிமுகப்படுத்தி இப்படியொரு கௌரவமான பாத்திரத்தில் நடிக்க வைத்த அண்ணன் இயக்குனர் திரு.சீனுராமசாமி அவர்களுக்கு நன்றி.

என்னை ஊக்குவித்த பத்திரிகை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Back To Top
CLOSE
CLOSE