Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆன்லைனில் நேரடியாக வெளியிடும் தமிழ் படம் ‘கர்மா’

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆன்லைனில் நேரடியாக வெளியிடும் தமிழ் படம் ‘கர்மா’

பாலிவுடின் பிரபல இயக்குனரும் மாற்று சினிமாவுக்கான முன்னோடியாக திகழும் திரு. அனுராக் காஷ்யப், கிரியேட்டிவ் கிரிமினல் பட நிறுவனம் தயாரித்து, அரவிந்த இயக்கிய கர்மா திரைப்படத்தினை இணையதளங்களில் நேரடியாக காணும் லிங்கை ட்விட்டரில் வெளியிடுகிறார். ஆன்லைனில் நேரடியாக வெளியிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் ‘கர்மா’

கிரியேட்டிவ் கிரிமினல் சார்பில் ஆர். அரவிந்த் இயக்கித்தில் உருவாகியுள்ள ‘கர்மா’ திரைப்படத்தை செப்டம்பர் 16 முதல் ஆன்லைனில் காணலாம். iTunes, Google Play, Amazon Video உட்பட பல இணையதளங்களில் இப்படத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று, இணையத்தின் வளர்ச்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருப்பதை மறுக்க முடியாது. இனி வரும் காலங்களில் இணையத்தில் திரைப்படங்களை வெளியிடுவது சர்வ சாதாரணமாகலாம். அதற்கு முன்னோடியாக நாங்கள் திகழ்வதற்கு பெருமை அடைகிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு ஊடகங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.

‘கர்மா’ திரைப்படம் சமீபத்தில் நடந்த Madrid International Film Festivalல் உலக திரைப்படங்களில் சிறந்த இயக்குனருக்கான விருதில் தகுதி பெற்றது குறிப்பிடதக்கது. அது மட்டும் இல்லாமல் Hollywood Sky Film Festivalளிலும் சிறந்த திரைப்படத்திற்கான தகுதி பெற்றது. இத்திரைப்படம் Experimental வகை சேர்ந்த Independent Cinemaவாகும்.

திரு. ‘கவிப்பேரரசு’ வைரமுத்து இப்படத்திற்கான டைட்டில் பாடலை எழுதி, பாடியுள்ளார். திரு. L.V. கணேசன் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்க்கான ஒளிப்பதிவு திரு. V.B. சிவானந்தம், படத்தொகுப்பு திரு. வினோத் பாலன் மற்றும் ஊடக தொடர்பு திரு. நிகில் முருகன் அவர்கள்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஆன்லைனில் வெளியிடப்படும் ‘கர்மா’ திரைப்படத்திற்கு தங்கள் மேலான ஆதரவை வழங்கி, புது முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

Back To Top
CLOSE
CLOSE