Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

எட்டு இளம் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையில் ‘தாயம்’ விளையாட முடிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி .

எட்டு இளம் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையில் ‘தாயம்’ விளையாட முடிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி

‘தாயம்’ என்ற வார்த்தையை கேட்டாலே நம் நினைவுகள் யாவும் நம்முடைய குழந்தை பருவத்திற்கு செல்கின்றது. அரசனில் இருந்து சராசரி குடிமகன் வரை அனைவராலும் மதிக்கப்பட்ட, மதிக்கப்பட்டு வரும் ஒரு விளையாட்டு ‘தாயம்’. அத்தகைய வலிமையான விளையாட்டின் பெயரை தலைப்பாக கொண்டு உருவாகி இருக்கிறது, ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்து இருக்கும் ‘தாயம்’ திரைப்படம். கலை நயத்தோடு குறும்படங்களை உருவாக்கும் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் இந்த ‘தாயம்’ திரைப்படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார் பி.திரு. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முழு நீள படத்தை ஒரே அறையில் படமாக்கி இருக்கும் பெருமை ‘தாயம்’ திரைப்படத்திற்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஹாரர் – சஸ்பென்ஸ் – திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘தாயம்’ திரைப்படத்தில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படப்புகழ் சந்தோஷ் பிரதாப் மற்றும் புது முகம் அய்ரா அகர்வால் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எட்டு கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த ‘தாயம்’ திரைப்படம், ஒளிப்பதிவாளர் பாஜி (ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவிடம் இணை ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்), இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் (அறிமுகம்), படத்தொகுப்பாளர் சுதர்சன் (ஜீரோ), கலை இயக்குனர் வினோத் ராஜ்குமார் (உறுமீன், ஒரு பக்க கதை), பாடலாசிரியர்கள் முத்தமிழ் (ஜிகர்தண்டா), அருண்ராஜா காமராஜ், பாடகர்கள் ‘கவிதை குண்டர்’ எம்சி ஜாஸ், சக்திஸ்ரீ கோபாலன், நிக்கித்தா காந்தி (லேடியோ – ஐ), அல்போனேஸ் ஜோசப் (ஆரோமலே) மற்றும் சவுண்ட் என்ஜினீயர் கார்த்திக் (ஹாலிவுட்டின் புகழ் பெற்ற ‘வேன் ஹெல்சிங்’ வீடியோ கேம்மிற்கு சவுண்ட் என்ஜினீயராக பணி புரிந்தவர்) என பல திறமை பெற்ற வலுவான தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.

“நேர்காணலுக்காக எட்டு இளைஞர்கள் ஒரு தனி அறையில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் அப்படி என்ன நேர்காணலுக்கு சென்றார்கள், அது எப்படி முடிவடைகிறது என்பது தான் எங்களின் ‘தாயம்’ படத்தின் ஒரு வரி கதை. ஒரே ஒரு அறையில் எங்களின் ஒட்டுமொத்த கதையானது படமாக்க பட்டிருந்தாலும், ‘தாயம்’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையானது காட்சிக்கு காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகும் . ஒரு சிறந்த ஹாரர் படத்திற்கு வலுவான தூணாக அமைவது பின்னணி இசை தான். எனவே, எங்கள் ‘தாயம்’ படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் பிரத்தியேகமாக கிரீஸ் – மசிடோனியா நாட்டின் புகழ் பெற்ற F.A.M.E.S ஸ்டுடியோவில் ரெகார்ட் செய்து இருக்கிறோம்..படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகளில் நாங்கள் தற்போது மும்மரமாக செயல்பட்டு வருகிறோம்…முழுக்க முழுக்க வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கும் எங்களின் ‘தாயம்’ திரைப்படமானது நிச்சயமாக மற்ற எல்லா திகில் படங்களில் இருந்தும் தனித்து விளங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது….”என்று கூறுகிறார் ‘தாயம்’ படத்தின் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி.

Back To Top
CLOSE
CLOSE